PDF chapter test TRY NOW

பெரிஸ்கோப் என்பது ஒரு பொருள் அல்லது நீர்மூழ்கிக் கப்பலுக்கு மேலாக அல்லது அதைச் சுற்றியுள்ள பிற பொருள்கள் அல்லது கப்பல்களைப் பார்ப்பதற்காக பயன்படுத்தப்படும் கருவியே ஆகும்
160-1.jpg
 
ஹிப்போலைட் மேரி-டேவி, 1854 ஆம் ஆண்டில் முதல் கடற்படை பெரிஸ்கோப்பைக் கண்டுபிடித்தார். சைமன் லேக் 1902 இல் தனது நீர்மூழ்கிக் கப்பல்களில் பெரிஸ்கோப்களைப் பயன்படுத்தினார்.
 
ஒளி எதிரொளித்தல் விதிகளின் அடிப்படையில் இக்கருவியானது செயல்படுகிறது. இது நீண்ட வெளிப்பகுதியைக் கொண்டுள்ளது. அதன் உட்பகுதியில் 45° கோணச் சாய்வில் ஒவ்வொரு முனையிலும் கண்ணாடி அல்லது முப்பட்டகமானது பொருத்தப்பட்டுள்ளது. 
 
பெரிஸ்கோப்பின் மேல் முனையில் உள்ள கண்ணாடியில் வெகு தொலைவில் உள்ள பொருளிலிருந்து வரும் ஒளியானது விழும் போது, செங்குத்தாகக் கீழ் நோக்கி எதிரொளிக்கிறது. இவ்வாறு வரும் ஒளியானது பெரிஸ்கோப்பின் கீழ்ப்பகுதியில் உள்ள கண்ணாடியில் பட்டு, எதிரொளிக்கப்பட்டு கிடைமட்டத் திசையில் சென்று பார்ப்பவரின் கண்களை அடைகிறது.
 
7.png
 
சிக்கலான அமைப்புடைய சில வகை பெரிஸ்கோப்களில் உயர் காட்சித்திறனைப் பெறுவதற்காக, கண்ணாடிகளுக்குப் பதிலாக ஒளியிழைகள் (optic fibre) பயன்படுத்தப்படுகின்றன. இதன் உட்பகுதியில் உள்ள கண்ணாடிகளுக்கிடையே உள்ள தூரமானது பயன்பாட்டைப் பொருத்து மாற்றியமைக்கப்படுகிறது.
 
பயன்கள்:
  • இவை போர்களிலும், நீர்மூழ்கிக் கப்பல்களை வழி நடத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.
  • இவை ராணுவத்தில் பதுங்கு குழியிலிருந்து இலக்கினைக் குறி பார்ப்பதற்கும், சுடுவதற்கும் பயன்படுகின்றன.
  • பெரிஸ்கோப்பினைப் பயன்படுத்தி தடைசெய்யப்பட்ட ராணுவப்பகுதிகளுக்குள் செல்லாமலேயே அந்த இடங்களைப் புகைப்படம் எடுக்க முடியும்.
  • ஒளியிழை பெரிஸ்கோப்பினை மருத்துவர்கள் உடல் உள்உறுப்புக்களைப் பார்ப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.