PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளிக்கதிர்கள் பயணிக்கும் போது ஏற்படும் ஒளிவிலகலானது இரு விதிகளுக்கு உட்படுகிறது. இவை, ஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதிகள் எனப்படுகின்றன. அவை பின்வருமாறு:
 
i. படுகதிர், விலகுகதிர் மற்றும் அவை சந்திக்கும் புள்ளியில் வரையப்பட்ட குத்துக்கோடு ஆகிய அனைத்தும் ஒரே தளத்தில் அமையும்.
 
ii. படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் (\(i\)), விலகுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் (\(r\)) இடையே உள்ள தகவு, ஒளிவிலகல் எண்ணிற்குச் சமமாகும். இது ஒரு மாறிலி ஆகும்.
 
sinisinr=μ
 
5.png
 
மேலே உள்ள படத்தில் இருந்து,
 
\(\theta_1\) \(-\) படுகோணம்
 
\(\theta_2\) \(-\) விலகுகோணம்
 
\(n_1\) \(-\) காற்றின் ஒளிவிலகல் எண்
 
(n_2\) \(-\) நீரின் ஒளிவிலகல் எண்
 
எனவே,
 
n1sinθ1=n2sinθ2sinθ1sinθ2=n2n1=Constant