PDF chapter test TRY NOW
ஓர் ஊடகத்தில் ஏற்படும் ஒளிவிலகலானது அந்த ஊடகத்தின் வழியே செல்லும் ஒளியின் திசைவேகத்தை பொருத்து அமையும். ஓர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் அதிகமாக இருக்கும் போது, ஒளிவிலகல் குறைவாகவும், ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும் போது, ஒளிவிலகல் அதிகமாகவும் இருக்கும்.
ஒளிவிலகல்
ஓர் ஊடகத்தில் ஒளி விலகலடையும் அளவானது அந்த ஊடகத்தின் ’ஒளிவிலகல் எண்’ எனும் பதத்தால் குறிக்கப்படுகிறது.
ஒளிவிலகல் எண் என்பது காற்றில் ஒளியின் திசைவேகத்திற்கும், ஒரு குறிப்பிட்ட ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு ஆகும். இது ’தனித்த ஒளிவிலகல் எண்’ (absolute refractive index) எனவும் குறிப்பிடப்படுகிறது.
’\(\mu\)’ (இதன் உச்சரிப்பு மியூ) எனும் கிரேக்க எழுத்து மூலம் இது குறிப்பிடப்படுகிறது.
ஒளிவிலகல் எண்ணானது இரண்டு ஒரே மாதிரியான அளவீடுகளின் தகவு என்பதால் அதற்கு அலகு இல்லை.
எந்த ஒரு ஊடகத்திலும் ஒளியின் திசைவேகம் காற்றில் உள்ள அதன் திசைவேகத்தை விடக் குறைவாக இருப்பதால் ஒளி ஊடுருவக்கூடிய ஊடகத்தின் ஒளிவிலகல் எண் ஒன்றை விட அதிகமாகவே இருக்கும்.
ஒரு சில பொருள்களின் ஒளிவிலகல் எண் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
பொருள்கள் | ஒளிவிலகல் எண் |
காற்று | \(1.0\) |
நீர் | \(1.33\) |
ஈதர் | \(1.36\) |
மண்ணெண்ணெய் | \(1.41\) |
சாதாரணக் கண்ணாடி | \(1.5\) |
குவார்ட்ஸ் | \(1.56\) |
வைரம் | \(2.41\) |
அட்டவணை - பொருள்களின் ஒளிவிலகல் எண்
பொதுவாக, ஓர் ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைப் பொருத்து மற்றோர் ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அவற்றின் தனித்த ஒளிவிலகல் எண்களின் தகவின் மூலம் பெறப்படுகிறது.
ஆகவே,
ஓர் ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணானது, வேறொரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைப் பொருத்து, முதல் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும், இரண்டாவது ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு மூலம் கொடுக்கப்படுகிறது.