PDF chapter test TRY NOW
கார்பன் டை ஆக்ஸைடு ஒரு கார்பன் மற்றும் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களால் ஆனது. எனவே இது CO_2 என குறிக்கப்படுகிறது. இது அறை வெப்பநிலையில் வாயுவாக இருக்கும். பூமியால் திரும்ப அனுப்பப்படும் சூரிய ஆற்றலை இது திரும்ப பூமிக்குள் அனுப்பி பூமியில் உயிரினங்கள் வாழத் தேவையான வெப்பநிலையினைக் கொடுக்கிறது. ஆனால் வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைடின் அளவு அதிகமானால் அது பூமியின் வெப்பநிலையினை மிகவும் அதிகரிக்கும்.
வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தில் 96-97% கார்பன் டை ஆக்ஸைடு இருப்பதால் அதன் வெப்பநிலை 462°C\ ஆகும். பூமியின் அதிகபட்ச வெப்பநிலை 56.7°C\ ஆகும்.
கார்பன் டை ஆக்ஸைடு பரவல்:
பூமியின் வளிமண்டலத்தில் 0.03 % கார்பன் டை ஆக்ஸைடு மட்டுமே உள்ளது. இது விலங்குகள் மற்றும் தாவரங்கள் சுவாசித்தலினாலும், நொதித்தல் போன்ற நிகழ்வுகளாலும் இயற்கையாக உருவாகிறது. மேலும் எரிமலையிலிருந்து வரும் மேக்மா மூலம் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு மிகவும் அதிகமாகும்.இயற்கையாக உருவாகும் கார்பன் டை ஆக்ஸைடுடன் மனிதர்கள் செயற்கையாக உருவாக்கும் கார்பன் டை ஆக்ஸைடும் சேர்வதால், இயற்கையாக நடக்கும் கார்பன் சுழற்சியின் சமநிலை பாதிக்கப்படுகிறது.
இதனால் அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்ஸைடு சிறிதளவே இருந்தாலும், கார்பன் டை ஆக்ஸைடு அதிகரிப்பினால் பூமியில் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
இயற்பியல் பண்புகள்:
- கார்பன் டை ஆக்ஸைடு நிறமற்ற, மணமற்ற வாயு
- காற்றைவிடக் கனமானது.
- எரிதலுக்குத் துணை புரியாது.
- நீரில் ஓரளவுக்கு நன்றாக கரையக்கூடியது.
- இது அமிலத் தன்மை வாய்ந்தது.
- அதிக அழுத்தத்தைப் பயன்படுத்தி இதனைத் திரவமாக்கலாம். மேலும் திண்மமாகவும் மாற்றலாம்.
- திட நிலையில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடு உலர் பனிகட்டி என அழைக்கப்படுகிறது. இது அறை வெப்பநிலையில் பதங்கமாதலுக்கு உட்படக்கூடியது.

உலர் பனிகட்டி
பதங்கமாதல்:
அறை வெப்பநிலையில் ஒரு பொருள் வெப்பப்படுத்தபடும்போது திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறினால் அது பதங்கமாதல் எனப்படும்.
உதாரணம்: கற்பூரம்

கற்பூரம் பதங்கமாதல்
பயன்கள்:
- காற்றேட்டப்பட்ட குளிர்பானங்கள் அல்லது மென்பானங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
- உலர் பனிகட்டி குளிர்பதனப் பெட்டிகளில் பயன்படுகிறது.
- இது மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் காற்றிலுள்ள ஈரப்பதம் இதன்மீது பட்டு வெண்ணிற புகைமூட்டம் போன்ற தோற்றம் அளிக்கிறது.
- மேடை நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா காட்சிகளில் இந்த புகைமூட்டம் பயன்படுகிறது.
- கார்பன் டை ஆக்ஸைடு எரிதலை தடுப்பதால் தீயணைப்பான்களில் பயன்படுகிறது.
- சேடியம் கார்பனேட் தயாரிக்கப் பயன்படுகிறது.
- யூரியா போன்ற உரங்கள் தயாரிக்க அமோனியாவுடன் சேர்ந்து பயன்படுகிறது.
- உணவு தானியங்கள் பழங்கள் போன்றவற்றைப் பதப்படுத்த இது பயன்படுகிறது.

கார்பன் டை ஆக்ஸைடின் பயன்கள்
காற்றேற்றப்பட்ட நீர் அல்லது குளிர்பானம் என்பது அதிக அழுத்தத்தில் கார்பன் டை ஆக்ஸைடு வாயு நீரில் கரைந்துள்ள பொருளாகும். இது சோடா நீர் எனவும் அழைக்கப்படுகிறது