PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அறிமுகம்:
  
அண்ட வெளியில் உள்ள அனைத்துப் பொருட்களும் நிறை மற்றும் பருமனை பெற்றுள்ளன.
இப்பொருட்களையே நாம் பருப்பொருள் என்கிறோம்.
  • இந்த உலகத்தில் உள்ள உயிருள்ள மற்றும் உயிரற்ற (வெளிப்பாடுகள் , நிகழ்வுகள், உயிரிப் பரிணாம வளர்ச்சிகள்) அனைத்துப் பொருட்களும் பருப்பொருள் மற்றும் ஆற்றலால் உருவாக்கப்பட்டவை.
  • இதில் சில பருப்பொருள்கள் கனமாகவும், சில பருப்பொருள்கள் இலேசானதாகவும் காணப்படும்.
  • எப்பொருள் இடத்தை அடைத்துக்கொள்ளும் பண்பையும், குறிப்பிட்ட நிறையையும் பெற்றுள்ளதோ அதுவே பருப்பொருள் என வரையறுக்கப்படுகிறது.
பருப்பொருள்கள் மூன்று நிலைகளில் காணப்படும்: அவை,
  1. திண்மம் - (மரம், கல், மணல், இரும்பு)
  2. திரவம் - (நீர், பால், பழச்சாறு
  3. வாயு - (ஆக்சிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு)
rocks-g15883b264_1920.jpg wave-ge8b2c402e_1920.jpg oxygen-gaa0ca7090_1280.png
 
இயற்பியல் நிலையில் உள்ள பருப்பொருள்கள் ஆனவை அணுக்கள், மூலக்கூறுகள், அல்லது அயனிகள் எனும் சிறிய துகள்களால் ஆனவை.
 
அணு
அணு என்பது ஒரு தனிமத்தின் அனைத்துப் பண்புகளையும் கொண்ட மிகச்சிறிய துகள் ஆகும்.
TCIND_220518_3760_2.png
 
மூலக்கூறுகள்
மூலக்கூறுகள் என்பவை ஒரே தனிமத்தின் அணுக்களோ அல்லது வெவ்வேறு தனிமங்களின் அணுக்களோ சேர்ந்து மூலக்கூறுகளை  உருவாக்குகின்றன.
TCIND_220518_3760_3.png
  
அயனிகள்
  
அயனிகள் என்பவை நேர் மின்சுமை அல்லது எதிர் மின்சுமை (மின்சுமை) பெற்றுள்ள அணுக்கள் அல்லது அணுக்களின் தொகுப்பு ஆகும்.
shutterstock154448771.jpg
அயனி 
 
Important!
அணுக்களே பருப்பொருள்களின் முக்கிய கட்டமைப்புப் பொருள்களாகும்.
இந்தப் பாடத் தொகுப்பில் நாம் தனிமங்களின் குறியீடுகள், உலோகம்,  அலோகம், திண்மம், திரவம், வாயுக்களின் சேர்மங்கள் மற்றும் அன்றாட வாழ்வில் சேர்மங்களின் பயன்கள் ஆகியவற்றை குறித்து விரிவாகவும் தெளிவாகவும் அறிவோம்.