PDF chapter test TRY NOW
தனிமங்கள்:
தனிமங்கள் என்பது அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ள ஒரு தூய பொருள். இதனை இரசாயன முறைகளில் எளிமையான மூலக்கூறுகளாக உடைக்க முடியாது.
Example:
தங்கம் ஒரு தனிமம், தங்கத்தை ஒரு சுத்தியால் அடித்தால் அது சிறு சிறு தங்க துண்டுகளாக தான் மாறுமே தவிர வேறு எந்த பொருளாகவும் மாறாது.
- தனிமங்கள் ஒரே வகையான அணுக்களை மட்டுமே கொண்டிருக்கும்.
- ஒரு அணு என்பது ஒரு தனிமத்தின் மிகச்சிறிய துகள் ஆகும்.
- தனிமங்கள் எப்பொழுதும் அதன் பண்புகளை மட்டுமே கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியான வேதியியல் அமைப்பு, அளவு மற்றும் நிறை ஆகியவற்றைக் பெற்றுள்ளன.
- ஒவ்வொரு அணுவிற்கும் ஒரு அணு எண் உள்ளது. ஒரு அணு எண் என்பது அத்தனிமத்தின் அணுவின் உட்கருவில் இருக்கும் புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. வேதியியலில் இதுவரை மொத்தம் \(118\) தனிமங்கள் கண்டுபிடிக்கபத்துள்ளது.
- பல தனிமங்கள் இயற்கையாகவே பூமியில் கிடைக்கின்றன. ஒரு சில தனிமங்கள் மட்டும் ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்படுகின்றன.
தனிமங்களின் குறியீடுகள்:
ஒரு குறிப்பிட்ட பொருளை குறிக்கக்கூடிய உருவம் மற்றும் பொருள் ஆகியவற்றையே குறியீடு என்போம்.
தனிமாத்தின் குறியீடு என்பது ஒரு தனிமத்தை குறிக்கும் எளிய வடிவமாகும்.
Example:
கணிதச் செயல்பாடுகளையும் எப்படி குறியீடு மூலம் குறிக்கிறோம். கூட்டல் செயலை ‘\(+\)’ என்ற குறியீட்டினாலும், கழித்தல் செயலை ‘\(-\)’ என்ற குறியீட்டினாலும் குறிக்கிறோம்.
அதேபோல வேதியியலில் ஒவ்வொரு தனிமத்தின் பெயரினை நான்கு வகையான குறியீடுகள் மூலம் குறிக்கப்படுகிறது ஏனென்றால் தனிமத்தின் முழு பெயரையும் எழுதுவது கடினமாகும்.
- கிரேக்கக் குறியீடுகள்
- இரசவாதிகளின் குறியீடுகள்
- டால்டனின் குறியீடுகள்
- பெர்சிலியஸ் குறியீடுகள்
1. கிரேக்கக் குறியீடுகள்:
கிரேக்கக் குறியீடுகள்
2. இரசவாதிகள் குறியீடுகள்:
உதாரணமாக: இரும்பைத் தங்கமாக மாற்றும் கலை இரசவாதம் என்று அழைக்கப்படும்.
இரும்பைத் தங்கமாக மாற்றும் கலைஞர்களை இரசவாதிகள் எனப்படுவர்.
இரசவாதிகள் குறியீடுகள்
3. டால்டனின் குறியீடுகள்:
- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் டால்டன் என்ற அறிவியல் அறிஞர் \(1808\) ஆம் ஆண்டு இவர் பல்வேறு தனிமங்களின் பெயர்களை வரைபடக் குறியீடுகள் மூலம் குறிப்பிட்டார்.
- இவர் கண்டுபிடித்த குறியீடுகளை வரைவது அவ்வளவு எளிதாக இல்லாத காரணத்தால் அவை பயன்படுத்தப்படவில்லை. எனவே, இவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக மட்டுமே உள்ளன.
டால்டனின் குறியீடுகள்
4. பெர்சிலியஸ் குறியீடுகள்:
- ஜான் ஜேகப் பெர்சிலியஸ் என்பவர் \(1813\) ஆம் ஆண்டு தனிமங்களைக் குறிப்பதற்கு படங்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்களைப் பயன்படுத்தும் முறையை உருவாக்கினார்.
- பெர்சிலியஸ் முறையின் மாற்றியமைக்கப்பட்ட வடிவமான "தனிமங்களின் குறியீடுகளைத் தீர்மானிக்கும் முறை" நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.