PDF chapter test TRY NOW
1. வைரம் மற்றும் கிராபைட் - அலங்கார நகைகள், வெட்டும் மற்றும் அரைக்கும் சாதனங்கள் தயாரிக்க வைரம் பயன்படுகிறது. கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் கிராஃபைட் பயன்படுகின்றது.
2. கந்தகம் - துப்பாக்கித் தூள் தயாரிக்க மற்றும் ரப்பரை கெட்டிப்படுத்த பயன்படுகின்றது.
3. பாஸ்பரஸ் - தீப்பெட்டி மற்றும் எலி மருந்து தயாரிக்கப் பயன்படுகின்றது.
4. நைட்ரஜன் - அம்மோனியா தயாரிக்கப் பயன்படுகின்றது.
5. குளோரின் - நிறம் நீக்கி மற்றும் குடிநீரில் உள்ள நுண்ணுயிரிகளை அழிக்கும் பொருளாக பயன்படுகின்றது.
6. ஹைட்ரஜன் - ராக்கெட் எரிபொருள், உலோகங்களை உருக்கி ஒட்டவும், வெட்டவும் மற்றும் வேதிவினைகளில் குறைப்பானாகவும் பயன்படுகின்றது.