
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅலோகங்கள்
கந்தகம், கார்பன், ஆக்சிஜன் போன்ற தனிமங்கள் அலோகங்கள் ஆகும்.



கந்தகம், கார்பன் மற்றும் ஆக்சிஜன்
அலோகங்களின் இயற்பியல் பண்புகள்:
1. சாதாரண வெப்பநிலையில் அலோகங்கள் திண்மம், திரவம், வாயு ஆகிய மூன்று நிலைகளிலும் காணப்படும்.
உதாரணம்:திட நிலை - கந்தகம் மற்றும் பாஸ்பரஸ், திரவ நிலை - புரோமின், வாயு நிலை - ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன்.


பாஸ்பரஸ் மற்றும் புரோமின்
2. அலோகங்கள் கடினத்தன்மை அற்றவையாக உள்ளன.
Important!
வைரம் மட்டும் ( கார்பனின் வடிவம்) அதிக அடர்த்தி கொண்டது மற்றும் மிகவும் கடினமானது.

வைரம்
3. அலோகங்கள் பளபளப்பற்ற தோற்றம் கொண்டவை.
4. அலோகங்கள் மென்மையானது மற்றும் அடர்த்தி குறைந்தவை.
5. அலோகங்கள் குறைந்த உருகுநிலையும், கொதிநிலையும் கொண்டவை.
6. அலோகங்கள் தகடாக மாறும் பண்பு அற்றவை.
7. அலோகங்கள் கம்பியாக மாறும் தன்மை அற்றவை.
Important!
கார்பன் இழைகள் மட்டும் கம்பியாக நீளும் தன்மை உடையது.
8. அலோகங்கள் மின்சாரத்தை அரிதாகக் கடத்துகின்றன.
Important!
கிராஃபைட் (கார்பனின் வடிவம்) மட்டுமே மின்சாரத்தைக் கடத்தும்.
9. அலோகங்களைத் தட்டும் போது அவை ஒலி எழுப்புவதில்லை.
உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை ஒப்பீடுக:
1. அறை வெப்ப நிலை
உலோகம் - பொதுவாக திண்மம் (சில நேரங்களில் திரவம்)
அலோகம் - திண்மம், திரவம், வாயு
2. தகடாக மாறும் தன்மை
உலோகம் - அடிக்கும் போது தகடாக மாறும்
அலோகம் - மென்மையானது அல்லது உடையக் கூடியது.
3. கம்பியாக நீளும் தன்மை
உலோகம் - இழுக்கப்படும் போது கம்பியாக நீளும்
அலோகம் - மென்மையானது அல்லது உடையக் கூடியது.
4. திண்ம நிலையில் தோற்றம்
உலோகம் - பளபளப்பு உடையவை
அலோகம் - பளப்பளப்பற்றவை
5. உருகுநிலை, அடர்த்தி மற்றும் கொதிநிலை
உலோகம் - பொதுவாக அதிகம்
அலோகம் - பொதுவாக குறைவு
6. வெப்பம் மற்றும் மின்சாரம் கடத்தும் திறன்
உலோகம் - நற்கடத்திகள்
அலோகம் - அரிதிற்கடத்திகள்