
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. சலவைத் தூள் - சலவைத் தொழிலில் வெளுப்பானாகவும், கிருமி நாசினியாகவும், குடிநீர் சுத்திகரிப்பிலும் பயன்படுகிறது.
i. வேதிப்பெயர் - கால்சியம் ஆக்சி குளோரைடு
ii. பகுதிப்பொருள்கள் - கால்சியம், ஆக்சிஜன் மற்றும் குளோரின்

சலவைத் தூள்
2. சுட்ட சுண்ணாம்பு - சிமெண்ட் மற்றும் கண்ணாடி தயாரிப்பில் பயன்படுகிறது.
i. வேதிப்பெயர் - கால்சியம் ஆக்சைடு
ii. குதிப்பொருள்கள் - கால்சியம் மற்றும் ஆக்சிஜன்

சுட்ட சுண்ணாம்பு
3. நீற்றிய சுண்ணாம்பு - சுவர்களில் வெள்ளை அடிப்பதற்குப் பயன்படுகிறது.
i. வேதிப்பெயர் - கால்சியம் ஹைட்ராக்சைடு
ii. பகுதிப்பொருள்கள் - கால்சியம் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்

நீற்றிய சுண்ணாம்பு
4. சுண்ணாம்புக் கல் - சுண்ணாம்புக்கட்டி தயாரிக்கப் பயன்படுகிறது.
i. வேதிப்பெயர் - கால்சியம் கார்பனேட்
ii. பகுதிப்பொருள்கள் - கால்சியம், கார்பன் மற்றும் ஆக்சிஜன்

சுண்ணாம்புக் கல்