
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. நீர் - குடிநீராக மற்றும் கரைப்பானாகப் பயன்படுகிறது.
i. வேதிப்பெயர் - டை ஹைட்ரஜன் மோனாக்சைடு
ii. பகுதிப்பொருள்கள் - ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்

நீர்
2. உப்பு - உணவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மீன், இறைச்சி போன்றவை கெடாமல் பாதுகாக்க பயன்படுகிறது.
i. வேதிப்பெயர் - சோடியம் குளோரைடு
ii. பகுதிப்பொருள்கள் - சோடியம் மற்றும் குளோரின்

உப்பு
3. சர்க்கரை - இனிப்புகள், மிட்டாய்கள், பழச்சாறுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
i. வேதிப்பெயர் - சுக்ரோஸ்
ii. பகுதிப்பொருள்கள் - கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்

சர்க்கரை
4. ரொட்டிச் சோடா - தீயணைக்கும் சாதனங்களிலும், பேக்கிங் பவுடர் , கேக், ரொட்டி தயாரிப்பிலும் பயன்படுகிறது.
i. வேதிப்பெயர் - சோடியம் பை கார்பனேட்
ii. பகுதிப்பொருள்கள் - சோடியம்,ஹைட்ரஜன், கார்பன் மற்றும் ஆக்சிஜன்

ரொட்டிச் சோடா
5. சலவைச் சோடா - சோப்பில் தூய்மையாக்கியாகவும், கடின நீரை மென்நீராக்கவும் பயன்படுகிறது.
i. வேதிப்பெயர் - சோடியம் கார்பனேட்
ii. பகுதிப்பொருள்கள் - சோடியம், கார்பன் மற்றும் ஆக்சிஜன்

சலவைச் சோடா