PDF chapter test TRY NOW

இடம்பெயர்தல் மற்றும் இயக்கம் ஆகியவற்றின்  அடிப்படையில் இயக்கங்கள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை;
  1. அமீபாய்டு இயக்கம்
  2. சிலியரி இயக்கம்
  3. தசைகளின் இயக்கம்
அமீபாய்டு இயக்கம்:
  
DesignYCIND2.png
அமீபா
  • இவ்வகை இயக்கம் போலிக்கால்கள் மூலம் நடைபெறும்.
  • செல்லிலுள்ள புரோட்டோபிளாசம் நகரும் சமயத்தில் போலிக்கால்களும் அதோடு கூடவே நகர்ந்து இயக்கத்தை ஏற்படுத்துகிறது.
  • இந்த இயக்கம் பொதுவாக அமீபாவில் நடைபெறுவதால் அமீபாய்டு இயக்கம் என அழைக்கப்படுகிறது.
Example:
அமீபா
சிலியரி இயக்கம்:
 
DesignYCIND4.png
பாரமீசியம்
  • புறத்தோலிலுள்ள ரோமம் போன்ற நீட்சிகள் சிலியாக்கள் என அழைக்கப்படும்.
  • இவை இணை உறுப்புகளாகும்.
  • இவ்வகை இயக்கம் நிணநீர் மண்டலத்தில் உள்ள செல்களில் நடைபெறும்.
Example:
பாரமீசியம்
தசைகளின் இயக்கம்:
 
shutterstock1890566104.jpg
பறவை
  • இந்த இயக்கம் பல பகுதிகளை உள்ளடக்கியது.
  • இதில் எலும்பு மற்றும் தசை மண்டலம் இரண்டும் இணைந்து இயக்கத்தை ஏற்படுத்தும்.
  • மேம்பட்ட முதுகெலும்பிகளில் இவ்வகை இயக்கத்தை நாம் காணலாம்.
Example:
பறவை