PDF chapter test TRY NOW

நீங்கள் எப்பொழுதாவது நமது உடலை விரும்பின திசைகளுக்கு நேராக எவ்வாறு நகர்த்த முடிகிறது அல்லது திரும்பிப் பார்க்க முடிகிறதென்று  சிந்தித்திருக்கிறீர்களா? நாம் நினைக்கும் அந்நிமிடத்திலே நம்மால் எல்லாப் பாகங்களையும் நாம் விரும்பும் திசைகளுக்கு நேராகத் திருப்ப இயலுமா? இவ்வாறு நமக்குள் எழும் பல கேள்விகளுக்கான பதில்களை இந்த கோட்பாடு நமக்கு விளக்குகிறது.
மனிதர்களாகிய நம்மால், நமது உடலில் காணப்படுகின்ற ஒரு சில பாகங்களை மட்டுமே வெவ்வேறு திசைகளை நோக்கி நகர்த்த இயலும். குறிப்பிட்ட சில  பாகங்களை அனைத்து திசைகளிலும் நகர்த்த இயலாது மாறாக அப்பாகங்களை குறிப்பிட்ட ஒரு  திசையில் மட்டுமே இயக்க இயலும்.
மனித உடல் எலும்புகளாலான, எலும்பு மண்டலம் எனப்படும் சட்டக அமைப்பிலானது .
shutterstock_1724788288.jpg
மனித எலும்புக்கூடு
  
மனித உடலின் இயக்கங்கள் எவ்வாறு நடைபெறுகிறதென்பதைக் குறித்து அறிந்திருக்கிறீர்களா?
 
மனித உடலின்  \(5\) மிக முக்கியமான இயக்கங்கள் உள்ளன. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  • கண் இமைகளின் இயக்கம்
  • இதயத் தசைகளின் இயக்கம்
  • பற்கள் மற்றும் தாடையின் இயக்கம்
  • கைகள் மற்றும் கால்களின் இயக்கம்
  • தலையின் இயக்கம்
  • கழுத்தின் இயக்கம்
எலும்புகளும், தசைகளும் ஒருங்கே இணைந்து செயல்படும் தன்மையால் ஒரு சில உறுப்புகளின் இயக்கம் நிகழ்கின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட எலும்புகள் சந்திக்குமிடத்தில் இயக்கம் நடைபெறும்.
  
உங்களுக்கு தெரியுமா?
  • சிறுத்தை ஒரு மணி நேரத்தில் \(76 km\) வேகத்தில் ஓடும் வேகத்திறனைப் பெற்றுள்ளன.
  • மனிதனை விட நீர் யானை மிக வேகமாக ஓடும் தன்மை கொண்டது.
  • \(6\) கால்களைக் கொண்ட உயிரினங்களில் வேகமாக ஓடக்கூடியது கரப்பான் பூச்சியாகும். அவை \(1\) மீட்டர் தூரத்தை \(1\) வினாடியில் கடக்கும்.
  • பாலூட்டிகளில் ஒன்றான டால்பின் மணிக்கு \(35\) மைல்கள் வரை  விரைவாக நீந்தும் ஆற்றலைப் பெற்றுள்ளன.