PDF chapter test TRY NOW
இயக்கம் மற்றும் இடம் பெயர்தல் ஆகிய இரண்டு சொற்களின் பொருளும் நமக்கு ஒரே போலத் தோன்றினாலும் இவை இரண்டும் வெவ்வேறு அர்த்தம் உடையனவாகும். இந்த கோட்பாட்டில் நாம் இயக்கம் மற்றும் இடம்பெயர்தலுக்கு இடையேயுள்ள வேறுபாடுகள் குறித்துக் காண்போம்.
இயக்கம்:
இயக்கம் என்பது உயிரினங்கள் உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதிகளால் தங்களின் இடம் அல்லது நிலையை மாற்றும் செயலாகும்.
ஒவ்வொரு உயிரினத்தின் உடலிலும் உள்ள இரத்தத்தை அதன் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மாற்றும் செயல்பாடுகளைச் செய்வதற்கு உதவுவது இயக்கம் ஆகும்.
இரத்த ஓட்ட அமைப்பு
இயக்கம் இரண்டு வகைகளில் நிகழ்கிறது.
1. தன்னிச்சையானது
Example:
நடப்பது
2. தன்னிச்சை அற்றது
இடம்பெயர்தல்:
Example:
சுவாசித்தல்
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு உயிரினம் நகர்வது இடம் பெயர்தல் என வரையறுக்கப் படுகிறது.
உணவைக் கண்டுபிடிப்பதற்கு, கடும் வானிலையைத் தவிர்ப்பதற்கு, வேட்டையாடுபவரிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு இடம்பெயர்தல் முறை விலங்குகளுக்குப் பயனளிக்கிறது.
பறவைகள் இடம்பெயர்ந்து போகும் நிகழ்வு
இடம்பெயர்தலுக்குப் பயன்படும் உறுப்புகள்:
கை கால்கள், கசையிழை (ஃபிளாஜெல்லா), இறக்கைகள் மற்றும் சிலியாக்கள் போன்ற இணையுறுப்புகள் விலங்குகளின் இடம்பெயர்தலுக்குப் பயன்படும் மிக முக்கிய உறுப்புகளாகக் கருதப்படுகின்றன.
மீன், திமிங்கலம் மற்றும் சுறா ஆகியவை நீர்வாழ் உயிரினங்களாகும். இவற்றில், இடம்பெயர்தல் தொடர்ச்சியான அலை போன்ற தசை சுருக்கங்களின் விளைவால் நிகழ்கின்றது.