PDF chapter test TRY NOW
மனித உடலுக்குக் கடினமான கட்டமைப்பை வழங்குவது மற்றும் அதற்குப் பாதுகாப்பு அளிப்பது எலும்பு மண்டலம் ஆகும். இது இணைப்பு திசுக்களான குருத்தெலும்பு, எலும்பு, தசைநாண், தசைநார் போன்றவைகளால் ஆனது.
எலும்புக்கூட்டில் இயக்கம் நடைபெறுவதற்கான மூலக் காரணம் மூட்டுகளாகும். நம் உடலில் உள்ள மூட்டுகளில் இயக்கம் எதுவும் நடைபெறவில்லையெனில் உடலானது கல் போன்றே இருக்கும் அதாவது எந்த ஒரு இயக்கமும் இல்லாமல் இருக்கும்.

மனித எலும்புக்கூடு
நமது உடலில் எலும்புகள் அமைந்திருக்கும் விதத்தின் அடிப்படையில் எலும்புக் கூடு இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
புறச்சட்டகம்:
- இது பொதுவாக எக்ஸோஸ்கெலிடன் என்றும் அழைக்கப்படும்.
- புறச்சட்டகம் உடலின் வெளிப்புற அடுக்கில் காணப்படும் எலும்புக்கூடாகும்.
- இது தாயின் வயிற்றில் வளரும் கருவின் புறப்படை அல்லது இடைப்படை அடுக்கிலிருந்து உருவாகும்.
- மீன்களில் காணப்படும் செதில்கள், ஆமையின் வெளிப்புறத்தில் உள்ள கடினமான ஓடு, பறவையின் இறகுகள் வெளிப்புற காரணிகளிலிருந்து அவற்றின் உள்ளுறுப்புகளைத் தற்காத்துக் கொள்வது போல மனித உடலின் காணப்படும் கடினமான தன்மை கொண்ட புறச்சட்டகமும் உடலிலுள்ள உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கின்றன.
அகச்சட்டகம்:
- இது பொதுவாக எண்டோஸ்கெலிடன் என்றும் அழைக்கப்படும்.
- இது மனித உடலுக்குள் அமைந்திருக்கும் எலும்புக்கூடாகும்.
- இவ்வகை எலும்புக்கூடு இடைப்படையில் இருந்து உருவாகின்றன.
- அகச்சட்டகம் அனைத்து முதுகெலும்புள்ள உயிரினங்களிலும் காணப்படுவதோடு அவற்றின் உடலமைப்பை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.