PDF chapter test TRY NOW
மனித உடலிலுள்ள எலும்பு மண்டலம் ஐந்து மிக முக்கியமான பணிகளைச் செய்கின்றது.
- எலும்புக்கூடு உடலுக்கு அமைப்பு மற்றும் வடிவம் வழங்குகின்றது.
- உடலில் காணப்படும் உள்ளுறுப்புகளைச் சூழ்ந்து அவற்றிற்குப் பாதுகாப்பு அளிக்கின்றன.
- உடலைச் சீரமைக்கும் தாதுக்களான கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளுக்குள்ளே சேமிக்கப்படுகின்றன.
- இரத்த சிவப்பு அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன.
- எலும்புகள் தசைகளின் செயல்பாடுகள் மற்றும் இயக்கத்திற்கு நெம்புகோல் போலச் செயல்படுகின்றன.
தசை மற்றும் எலும்பை ஒன்றாக இணைக்கும் திசுக்களின் இழை நாண்களான டெண்டான் அதாவது தசைநாண்கள் ஆகும்.
தசை நாண்கள் அல்லது டென்டான்கள்
இரு வெவ்வேறு எலும்புகளை இணைக்கும் திசுக்களின் இழை நாண்களான லிகமெண்ட் அதாவது தசைநார்கள் ஆகும்.
தசை நார்கள் அல்லது லிகமண்ட்
லிகமெண்ட் மற்றும் டெண்டான் இரண்டும் இல்லாமல் நமது தசையில் எந்தவொரு இயக்கமும் நடைபெற இயலாது .
"பீமர்" என்பது தொடை எலும்பு ஆகும். இது மனித எலும்புக்கூட்டின் மிக நீளமான மற்றும் வலிமையான எலும்பாகும்.
கால் எலும்புகள்
நடுச்செவியில் இருக்கும் "ஸ்டேபஸ்" என்னும் எலும்பு தான் நமது உடலின் காணப்படும் மிகச் சிறிய எலும்பாகும்.
செவியின் அமைப்பு