PDF chapter test TRY NOW
இது நமது உடலின் பின்புற பகுதியில் நீண்டு இருக்கும். எனவே, பொதுவாக இவை முதுகுத்தண்டு அல்லது முதுகெலும்பு என அழைக்கப்படும்.
முள்ளெலும்புத் தொடர் மனித உடலில் மேல் பகுதியைத் தாங்கி நிற்கும் ஓர் தண்டுப் பகுதியாகும். மேலும், இவை முதுகெலும்புகள் எனக் கூறப்படும் தனிப்பட்ட எலும்புகளாலானவை.
முள்ளெலும்புத் தொடர்
முள்ளெலும்புத் தொடர் கீழ்க்காணும் எலும்புகளை உள்ளடக்கியது.
- கழுத்து எலும்புகள் - \(7\)
- மார்பு எலும்புகள் - \(12\)
- இடுப்பு எலும்புகள் - \(5\)
- திருகெலும்புகள் - \(5\)
- வால் எலும்புகள் - \(3\)
முள்ளெலும்புத் தொடர் மண்டை ஓட்டின் அடிப்பகுதி முதல் இடுப்பு எலும்பின் அடிவரை குழாய் போன்ற ஓரமைப்பை ஏற்படுத்தி முதுகுத்தண்டு அந்த குழாயின் உள்ளே செல்கின்றது.
முள்ளெலும்புகள் வழுக்கு மூட்டுகளால் இணைக்கப்பட்டிருப்பதால் எளிதாக உடலை முன்னும் பின்னும் வளைக்க இயல்கின்றது. இதன் செயல்பாடுகள் பின்வருமாறு,
- தண்டுவடத்தைப் பாதுகாக்கின்றது.
- தலைப்பகுதியைக் தாங்குகின்றது.
- விலா எலும்புகளை இணைக்கின்றது.
- மார்பு மற்றும் இடுப்பு எலும்புகளை இணைத்து வலுப்படுத்துகின்றது.
- மனித எலும்புக் கூட்டிற்குத் தேவையான அசைவை அளிக்கின்றது.
- சரியாக நடக்க மற்றும் தோரணையாக நிமிர்ந்து நிற்க உதவுகின்றது.