PDF chapter test TRY NOW

தோள்பட்டை எலும்பு அல்லது பெக்டோரல் எலும்பு:
  • முன் பகுதியில் உள்ள காலர் எலும்பும், பின்பகுதியில் உள்ள தோள்பட்டை சுத்தியல் எலும்பும் சேர்ந்து தோள்பட்டை எலும்பை உருவாக்குகின்றது.
  • காலர் எலும்பினை ஒரு புறம் மார்பு எலும்பும் மறுபுறம் தோள்பட்டை சுத்தியல் எலும்பும் தாங்குகின்றது.
  • இது பார்ப்பதற்குக் குழி போன்ற கிண்ண அமைப்புடன் ஒத்த வடிவத்தைக் கொண்டது. மேலும், இது மேல் கையின்  பந்துப்பகுதியையும் இணைக்கின்றது. அதோடு, இப்பகுதி பந்து கிண்ண மூட்டை உருவாகின்றது.
  • கைகளைத் தோள் பட்டையுடன் இணைக்கும் பகுதி பெக்டோரல் வளையம் என அழைக்கப்படும்.
shutterstock_526980469.jpg
தோள்பட்டை எலும்பு
 
இடுப்பு எலும்பு:
  • இது பெல்விக் வளையம் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றது.
  • இவை மிகவும் வலுவானவை ஆகையால் உடலின் முழு எடையும் தாங்குகிறது.
  • பின்புறத்தில் உள்ள இடுப்பு எலும்பு இணைந்த \(5\) முதுகு எலும்புகளால் உருவானதாகும்.
  • இதன் மேல்பகுதி பார்ப்பதற்குக் குழி போன்ற அமைப்புடன் உள்ளது.
  • கால் தொடை எலும்புகள் பந்து கிண்ண மூட்டுடன் இடுப்பு பகுதியின் இரு புறமும் இணைந்து காணப்படுகின்றன.
shutterstock_147789422.jpg
இடுப்பு எலும்பு