
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉடல் மற்றும் மனநிலையில் மிகவும் விரைவான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி ஏற்படும் காலகட்டம் வளரிளம் பருவம் ஆகும். அதற்கு சரியான ஊட்டச்சத்து மிகுந்த உணவு தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சரிவிகித உணவு எடுத்துக்கொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

சரிவிகித உணவு
சரிவிகித உணவில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்து இருக்கும்.
இந்தியாவில் சரிவிகித உணவின் கலவை என்பது ரொட்டி, பருப்பு வகைகள், சோறு, பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை உள்ளடக்கியது.
ஊட்டச்சத்து குறைபாடுகள் உடல் வளர்ச்சியை தடுப்பது மட்டுமின்றி அறிவு, மனவளர்ச்சியும் பாதிக்கின்றது. மேலும் இருபாலரிலும் பாலியல் முதிர்ச்சி தாமதப்படுத்தபடுகின்றது.
வளரிளம் பருவ காலத்தில் புரதங்களும் கார்போஹைட்ரேட்டுகளும் அதிகம் எடுத்துக்கொள்ளுதல் அவசியம் ஆகும்.
கனிமங்கள்
வளரிளம் பருவ காலத்தில் இரத்தத்தின் கனஅளவு அதிகரிக்கும். மேலும், அப்போது எலும்பின் எடையும் அதிகம் ஆகும். எனவே, அந்த சமயத்தில் உடலுக்கு கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற கனிமங்கள் அதிகமாக தேவைப்படும்.
கால்ஷியம்
இருபாலரிலும் குறிப்பாக பெண்களில் வயதான பின் வரும் ஒரு மோசமான எலும்பு நோய் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகும். அதாவது எலும்பு எளிதாக உடைந்து போகும் தன்மையைக் குறிக்கும்.

கால்ஷியம் உள்ள உணவுகள்
அதைத் தடுக்க வளரிளம் பருவ காலத்தில் கால்ஷியம் அதிகம் எடுத்துக்கொள்ளுதல் முக்கியம் ஆகும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் கால்ஷியம் அதிகம் காணப்படுகின்றது.
பால் ஒரு சரிவிகித உணவாகும்.
ஐயோடின்
தைராய்டு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க ஐயோடின் உதவும். ஐயோடின் நாம் தினமும் உட்கொள்ளும் உப்பில் அதிகம் உள்ளது.

ஐயோடின் உள்ள உணவுகள்
இரும்பு
உடலில் இரத்த உற்பத்தியில் முக்கிய பங்கு இரும்புச் சத்திற்கு உள்ளது. பச்சை இலைக்காய்கறிகள், கீரைகள், வெல்லம், இறைச்சி, சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய் மற்றும் பருப்பு வகைகளில் இரும்புச் சத்து நிறைந்து உள்ளது. இரும்புச் சத்துக் குறைபாடு இரத்த சோகை ஏற்படுத்தும்.

இரும்புச்சத்து உள்ள உணவுகள்
Important!
மேலும், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் இரத்தப்போக்கை ஈடு செய்ய பெண்கள் அதிக அளவில் இரும்புச்சத்து மிக்க உணவுகளை உண்ணவேண்டும்.