PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வளரிளம் பருவ காலத்தில் உடற்பயிற்சி, உணவு போலவே தன் சுகாதாரம்/சுய சுகாதாரம்  கடைபிடிப்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
தனிப்பட்ட சுகாதாரம் என்பது ஒரு மனிதனின் ஆளுமையைக் குறிக்கும் ஒரு குறியீடு ஆகும்.
இருபால் வளரிளம் பருவத்தினரும் கடைபிடிக்க வேண்டிய தனிப்பட்ட தன் சுகாதார வழக்க வழக்கங்கள் பின்வருமாறு,
  1. தினமும் குளிக்க வேண்டும்.
  2. உணவு உண்ணும் முன்னும் பின்னும் கைகளைக் கழுவ வேண்டும்.
  3. விரலில் உள்ள நகங்களை வெட்டி சீராக வைத்து இருக்க வேண்டும். நகப்பூச்சுகள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
  4. சமைக்கும்போது முகம், மூக்கு, வாயினைத் தொடக்கூடாது.
  5. ஒவ்வொரு முறையும் உணவு உண்ணும் முன் கைகளை கழுவ வேண்டும். பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
  6. உணவு இருக்கும் இடத்தில் தும்மல் வந்தால் தவிர்க்க வேண்டும். மேலும், பொது இடங்களில் இருமல் வரும்போது கைக்குட்டை கொண்டு வாயினை மூடிக்கொள்ள வேண்டும்.
  7. சமைத்த உணவை சுவை பார்க்க சுத்தமான கரண்டியை பயன்படுத்த வேண்டும்.
  8. தினமும் உடைகளை மாற்ற வேண்டும், முக்கியமாக உள்ளாடைகளை சுத்தமாக துவைத்து காயவைத்து பயன்படுத்த வேண்டும்.
  9. சுத்தமான கழிவறைகளை மலம் கழிக்க பயன்படுத்த வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிக்க கூடாது.
  10. உடல் நலம் இல்லாமல் போகும்போது சுயமாக மருந்துகள் உட்கொள்ள கூடாது. மருத்துவரை அணுகியே மருந்து உட்கொள்ள வேண்டும்.
 
 
shutterstock_609554363.jpg
நாகம் வெட்டுதல்