PDF chapter test TRY NOW
உலகில் உள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு முக்கியமான மாற்றம் வளர்ச்சி ஆகும்.
மனிதன் முதிர்ச்சி நிலையை அடையும் வரை வளர்ச்சி தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.
முதிர்ச்சி என்பது, ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்கு பதில் வினை புரியும் திறன் என்பது ஆகும். மேலும், இது படிப்படியான மற்றும் தொடர்ச்சியான மாற்றங்களின் மூலம் நிகழ்வது ஆகும். இதற்கு, முன்னேற்றம் என்று பொருள்.
மனித வளர்ச்சி நிலைகள்
- மழலை பருவம்
- குழந்தை பருவம்
- வளரிளம் பருவம்
- வயது வந்தோர் பருவம்
- நடுத்தர பருவம்
- முதுமை பருவம்
இதில் மிகவும் முக்கியமானது வளரிளம் பருவம் ஆகும்.
குழந்தை பருவம் தொடங்கி வயது வரும் பருவம் வரை மாறும் காலகட்டம் வளரிளம் பருவம் எனப்படும். டீன் ஏஜ் என்பது \(13\) வயது முதல் \(19\) வயது வரை உள்ள காலகட்டம் ஆகும்.
இப்போது நீங்கள் உள்ள பருவம், வளரிளம் பருவம் ஆகும். இந்த வயதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நாம் இந்த பாடத்தில் பின்வரும் பகுதிகளில் காணலாம்.
அவையாவன,
- மனித உடலின் இனப்பெருக்க நிலைகள்
- இனப்பெருக்க ஆரோக்கியம்
- வளரிளம் பருவத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்
- சுய சுகாதாரம்
ஆகியவை ஆகும்.