PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
"அடோலசர் "(adolescere) என்னும் இலத்தீன் வார்த்தையே வளரிளம் பருவம் என்றானது."வளர்வதற்கு" அல்லது "முதிர்ச்சிக்கான வளர்ச்சி" என்பதே அந்த வார்த்தையின் பொருளாகும்.
இந்த குறிப்பிட்ட கால கட்டத்தில் உடலில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படும். அவை, இருபாலரின் உயரம், எடை, பால் உறுப்புகள், தசைத்தொகுப்பு, மூளையின் அமைப்பு மற்றும் கட்டமைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
   
பருவமடைதல்:
உடல் ரீதியான மாற்றங்கள் மற்றும் உளவியல் ரீதியான மாற்றங்கள் மிக விரைவாக ஏற்படும் காலம் பருவமடைதல் எனப்படும். 
பருவமடையும் காலத்தின் நிறைவானது பாலியல் முதிர்ச்சி ஏற்படும் போது நிகழ்கிறது.
 
Important!
பருவமடையும் வயது,
  • ஆண் - \(12\) முதல் \(13\) வரை
  • பெண் - \(11\) முதல் \(15\) வரை
பருவமடைதலை பலக் காரணங்கள் பாதிக்கின்றன. அவை பின்வருவருமாறு,
  1. பருவ நிலை மாற்றம்
  2. உயிரியல் தாக்கங்கள்
  3. மரபணு தாக்கங்கள்
  4. வாழ்க்கை நிகழ்வுகள்
  5. சமூக பொருளாதார நிலை
  6. ஊட்டச்சத்து, உணவு
  7. உடல் கொழுப்பு
பருவமடையும் காலகட்டத்தில் இருபாலரின் உடலிலும் ஹார்மோன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை உடல் மாற்றம் மற்றும் நடத்தையில் மாற்றத்தை உண்டு செய்கின்றன.
 
இக்குறிப்பிட்ட காலகட்டத்தில் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் இருபாலரின் உடலிலும் தேவையான பால் சுரப்பிகளைத் தூண்டி வேதிப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்த செயலாக்கமே பருவமடைதலைத் தூண்டுகின்றது.
 
இனப்பெருக்க சுரப்பி :
Important!
  • ஆண் உடலில் உள்ள இனப்பெருக்கச் சுரப்பி விந்தகங்கள் (டெஸ்டோஸ்டீரான்) எனப்படும்.
  • பெண் உடலில் உள்ள இனப்பெருக்கச் சுரப்பி  அண்டகங்கள் (ஈஸ்ட்ரோஜன்) எனப்படும்.
இருபாலரின் உடலிலும் இந்த இனப்பெருக்க சுரப்பிகளால் முதல் மற்றும் இரண்டாம் நிலை பாலினப் பண்புகளில் மாற்றம் உண்டாகின்றது.  பருவமடைதலில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள் இனப்பெருக்க சுரப்பிகளால் ஏற்படுகின்றன.
 
YCIND20220821_4315_Reaching the age of adolescence_06.png
ஈஸ்ட்ரோஜனின் தாக்கங்கள்
 
YCIND20220821_4315_Reaching the age of adolescence_05.png
டெஸ்டோஸ்டீரானின் தாக்கங்கள்