PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஇருபாலரிலும் இனப்பெருக்க நிலைகள் இரண்டாக பிரிக்கப்படுகின்றன. அவைகள் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை இனப்பெருக்க நிலைகள் ஆகும்.
இனப்பெருக்க நிலை என்பது இனச்செல்களை உடல் உற்பத்தி செய்யும் நிலை ஆகும்.
பெண் உடலில் இனப்பெருக்க நிலை
பெண்களில் இனப்பெருக்க நிலையானது பருவமடையும் காலத்தில் தொடங்கும் (\(10 - 12\) வயது). பெண்களில் இனப்பெருக்க நிலை பின்னர் முடிவடைய \(45 - 50\) வயது ஆகும்.
ஆண் உடலில் இனப்பெருக்க நிலை
இனப்பெருக்க நிலை ஆண்களில் \(13\0 வயதில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் நீடிக்கின்றது. இந்த நிலை ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும். குறிப்பாக இருபாலரில் பெண்களில் பல்வேறு வகை மாற்றங்களுக்கு உட்பட்டு இந்த நிலை உள்ளது.
பூப்படைதல்
-
பருவமடையும் காலத்தில் பெண்களின் உடலில் தோன்றும் முதல் மாதவிடாய் பூப்படைதல் ஆகும்.
- இந்த தொடக்க காலகட்டத்தில் பெண்களின் உடலில் இணப்பெருக்கத்திற்கு முக்கியமான இனச்செல்லான அண்டம் முதிர்ச்சி அடைய துவங்கும்.
அண்டம் விடுபடுதல்
பெண் உடலில் உள்ள அண்டகத்தில் இருந்து அண்டம் வெளியேறும் நிகழ்வு அண்டம் விடுபடுதல் எனப்படும்.
- இது சுழற்சி முறையில் நடக்கும் ஒரு செயல்முறை ஆகும்.
- ஒரு சுழற்சி முடிந்து அடுத்த சுழற்சி நடைபெறும் \(14\) நாட்களுக்கு முன்னர் அண்டம் விடுபடுதல் ஏற்படுகின்றது.
- ஒரு சுழற்சி என்பது \(28\) நாட்கள் ஆகும். சரியாக \(14\)-ம் நாள் அண்டம் விடுபடுதல் நடக்கும்.
- இந்த சுழற்சி ஒவ்வொரு பெண்ணுக்கும் உடல் சார்ந்து வேறுபடும்.
- மேலும், தோராயமாக \(28 - 30\) நாட்கள் எனச் இச்சுழற்சி வேறுபடும்.
- மேலும், இந்த சுழற்சி நாட்களில் இடையில் ஒரே ஒரு முறை அண்ட விடுபடுதல் நடக்கும்.
- அதாவது ஒவ்வொரு சுழற்சிக்கும் ஒரு முறை அண்டம் விடுபடுதல் ஏற்படும்.
அண்டம் விடுபடுதல்
- இந்த சமயத்தில் கருவுற்ற முட்டையைப் பெற பெண்களின் உடலில் உள்ள கருப்பையின் சுவர் தடிமன் ஆகின்றது.
- மேலும் கருவுறுதலை தோற்றுவிக்க அண்டம் விடுபடுதல் ஒரு முக்கிய காரணம் ஆகின்றது.
கர்ப்ப காலம்
- அண்டகத்தில் உள்ள அண்டம் விடுபட்ட பின்னர் அது பெலோப்பியன் நாளத்தை அடையும். அதன் பின்னர் தான் கருவுறுதல் நடைபெறும்.
- கருவுற்ற முட்டை நன்கு வளர்ச்சி அடைந்த பின்னர் அது கருப்பையில் பதிய வைக்கபடும்.
- கார்பஸ் லூட்டியம் தொடர்ந்து வளர்ச்சி அடைவதால் பெண்களின் உடலில் அதிகமாக புரோஜெஸ்ட்டிரான் உற்பத்தி செய்யப்படுகின்றது.
கர்ப்பம் தோன்ற காரணம் மேலே குறிப்பிட்டு உள்ள செயல்பாடுகளே ஆகும்.
மேலும், தோராயமாக ஒரு பெண்ணின் கர்ப்ப கால அளவு \(280\) நாட்கள் ஆகும். கர்ப்பக் கால கட்டத்தின் முடிவில் குழந்தை பிறப்பு ஏற்படும்.