PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபெண்களில் இனப்பெருக்க நிலைகளில் பூப்படைதல், அண்டம் விடுபடுதல், கர்ப்ப காலம் என்று முற்பகுதியில் கண்டோம். ஆனால், அண்டமானது கருவுறாதப் பொழுது நிகழ்வது மாதவிடாய் ஆகும். இந்த நிலை குறித்து பின்வருமாறு விரிவாகக் காணலாம்.
மாதவிடாய்
- அண்டம் குறிப்பிட்ட நாட்களுக்குள் ஒரு சுழற்சியில் கருவுறவில்லை எனில் கார்பஸ் லூட்டியம் சிதைவடைய துவங்கும்.
- அதன் பின்னர் ஹார்மோன்களான புரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜன் உற்பத்தி உடலில் தற்காலிகமாக நின்று விடும்.
மாதவிடாய் சுழற்சி
- கருப்பையின் தடித்த சுவர், சுவரின் ரத்த நாளங்கள் மற்றும் கருவுறாத முட்டை, இவையும் சிதைவடைய துவங்கும்.
- இதன் காரணமாக பெண்களின் உடலில் உள்ள இனப்பெருக்க குழாயில் ரத்தப்போக்கு ஏற்படும். இது மாதவிடாய் எனப்படும்.
மாதவிடைவு
பெண்களுடைய வாழ்க்கையில் இனப்பெருக்க வாழ்வின் இறுதி கட்டம் மாதவிடைவு எனப்படும்.
- இந்த நிலையானது மாதவிடாய் நிறுத்தம் எனவும் கூறப்படும்.
- மாதவிடாய் சுழற்சியானது பெண்களுக்கு \(45 - 50\) வயதில் நின்று விடும். இதுவே மாதவிடைவு எனப்படுகின்றது.
- இந்த குறிப்பிட்ட காலத்தில் பெண்களுக்கு பின்வரும் மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
- கவலை, எரிச்சல், சோர்வு மற்றும் கவனக்குறைவு போன்றவை ஏற்படலாம்.
- அண்டகங்கள் அகற்றம் மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை இவையும் மாதவிடைவு ஏற்பட காரணம் ஆகும்.
Important!
தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்கள் மிக சிறிய வயதிலேயே பருவம் எய்துகின்றனர். இது நம்முடைய தவறான உணவு பழக்கத்தினால் ஏற்படுகின்றது. அதிக அளவில் நொறுக்குத்தீனி மற்றும் துரித உணவுகள் (junk food) உண்பதால் சிறு வயதிலேயே பெரியவர்கள் போன்ற தோற்றம் ஏற்படக் கூடும்.
துரித உணவுகள்