PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபருவமடைதல் ஏற்பட்ட பின்னர் பெண்களின் உடலில் ஏற்படும் இரண்டாம் நிலை பால் பண்புகளில் மாற்றம் ஏற்படுகின்றன. அவை உடலின் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
பெண்களில் இரண்டாம்நிலை பால் பண்புகள்
இடுப்பு
- இடுப்பு எலும்பு விரிவடைய துவங்கும்.
- தோலுக்கடியில் உருவாகும் கொழுப்பின் காரணமாக இடுப்பு பகுதி அகன்று பரந்து காணப்படும்.
மார்பகம்
- பெண்களின் உடலில் இடுப்பு பகுதி விரிவடைந்தபின் மார்பகம் வளர்ச்சியுற தொடங்கும்.
உரோமம்
- பெண்களின் உடலில் இடுப்பும், மார்பகமும் வளர்ச்சி அடைந்த பின் உடலில் உரோம வளர்ச்சி ஏற்படும்.
- அக்குள் பகுதியிலும் பிறப்புறுப்பின் வெளிப்புற பகுதியிலும் உரோமம் வளர துவங்கும்.
தோல்
- ஆண்களை போல பெண்களுக்கும் தோல் கடினமாகி தோலில் உள்ள துளைகள் பெரிதாக மாற துவங்கும்.
குரல்
- பெண்களில் குரல் ஒலி மாறுபடாது. உரத்து கீச்சிடும் ஒலியாக குரல் மாறுகின்றது.
குரல் வளை
தசைகள்
- உடல் தசைகளின் வளர்ச்சி காரணமாக கால்கள், கைகள் மற்றும் தோள்பட்டை போன்ற பகுதிகள் வடிவம் பெறுகின்றன. உடல் தோரணை மற்றும் தோற்றம் கொடுக்கின்றது.
எண்ணெய் சுரப்பி
- முகத்திலும் உடலிலும் எண்ணெய் சுரப்பிகள் செயல்பட துவங்குவதால் பருக்கள் உண்டாகும்.
Important!
வளரிளம் பருவ காலத்தில் எண்ணைய் சுரப்பிகளின் செயல்பாடு அதிகரிப்பதால் அவற்றின் சுரப்பு அதிகரிக்கும். அதனால் ஆண், பெண் இருபாலரின் முகத்திலும் பருக்கள் தோன்றும். இந்த சுரப்பு அதிகரிப்பதால் சில நேரங்களில் உடலில் இருந்து நாற்றம் உருவாகிறது.