PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஆண்களில் இரண்டாம் நிலை பால் பண்புகள் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பின்வருமாறு காணலாம்.
உரோமம்
முதல் நிலை பால் பண்புகள் வளர்ச்சி அடைந்த பின் ஆண்களின் உடலில் பின்வரும் உரோம மாற்றங்கள் ஏற்படும்.
- கை, முகம் மற்றும் அக்குள் பகுதிகளில் உரோம வளர்ச்சி அடையும்.
- பிறப்புறுப்பின் வெளிப்பகுதியில் உரோமம் வளரத் துவங்கும்.
தோல்
- தோல் கடினத்தன்மை அடைய துவங்கும். மேலும், தோலில் உள்ள துளைகள் பெரிதாகின்றன.
சுரப்பிகள்
- தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் பெரிதாவதால் முகப்பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும்.
ஆண்களின் இரண்டாம்நிலை பால்பண்புகள்
தசை
- ஆண்களின் உடலில் தசைகளில் உள்ள பலம் அதிகரிக்கின்றது. கால்கள், கைகள் மற்றும் தோள்பட்டை பகுதிகளுக்கு தசைகள் வடிவம் கொடுக்கின்றன.
குரல் மாற்றம்
- குரல் கரகரப்பாக மாறுகின்றது. சுருதி குறைந்து ஒலியின் அளவு அதிகரிக்கின்றது.
- பருவமடைதல் நிகழும் காலத்தில் பெண்களின் குரலில் ஏற்படும் மாற்றத்தை விட ஆண்களின் குரலில் ஏற்படும் மாற்றம் அதிகமாக இருக்கும்.
- ஆண்களின் தொண்டை அருகே காணப்படும் ஆடம்ஸ் ஆப்பிள் எனப்படும் குரல் ஒலிப் பெட்டகம் பருவமடைதல் காலத்தில் பெரிதாகி வளர்ந்து வெளியே துருத்திக்கொண்டு இருக்கும்.
ஆடம்ஸ் ஆப்பிள்
- வளரிளம் பருவ காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் சில ஒழுங்குபடுத்தும் வேதிப்பொருட்கள் உருவாகும். அந்த காரணத்தால் ஆடம்ஸ் ஆப்பிளில் மாற்றம் நடக்கின்றது.
- அதனால், குருத்தெலும்புடன் இணைந்து உள்ள தசைகளில் மாற்றம் ஏற்படுகின்றது.
- அதாவது குரல்வளை தசைகள் தளர்ந்து தடிமன் ஆகும். இந்த பகுதிக்குள் காற்று நுழையும்போது குரல் கரகரப்பாக மாறுகின்றது.
- பெண்களில் சிறிய குரல்வளையாக இருப்பதால் இந்த மாற்றம் வெளியே தெரிவது இல்லை. மேலும், குரல் சுருதியுடன் உரத்து காணப்படுகின்றது.