PDF chapter test TRY NOW
உராய்வின் வகைகள்:
உராய்வானது இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது. அவை,
- நிலை உராய்வு மற்றும்
- இயக்க உராய்வு
நிலை உராய்வு:
நிலை உராய்வு என்பது ஓய்வு நிலையில் இருக்கும் பொருள்களில் காணப்படும் உராய்வாகும்.
Example:
புவியிலுள்ள பொருள்கள் அனைத்தும் ஓய்வுநிலையில் நிலையாக உள்ளன.
இயக்க உராய்வு:
இயக்க உராய்வு என்பது பொருள்கள் இயக்கத்தில் இருக்கும்போது ஏற்படும் உராய்வாகும்.
இயக்க உராய்வானது மேலும் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது. அவை,
- நழுவு உராய்வு மற்றும்
- உருளும் உராய்வு
நழுவு உராய்வு:
நழுவு உராய்வு என்பது ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் நழுவும்போது இரண்டு பொருள்களின் பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வாகும்.
உருளும் உராய்வு:
உருளும் உராய்வு என்பது ஒரு பொருள் மற்றொரு பொருளின் மேற்பரப்பில் உருளும் போது அந்த இரண்டு பொருள்களின் மேற்பரப்புகளுக்கு இடையே உருவாகும் உராய்வாகும்.
உருளும் உராய்வு நழுவு உராய்வை விட குறைவாக இருக்கும். இதன் காரணமாகவே வாகனங்கள், தள்ளுவண்டிகள் மற்றும் பெட்டிகளில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.