PDF chapter test TRY NOW

உராய்வைப் பாதிக்கும் காரணிகள்:
 
உராய்வைப் பாதிக்கும் சில காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
. பரப்பின் தன்மை:
 
ஒரு பொருளை சொரசொரப்பன பரப்பின்மீது நகர்த்துவது கடினமாக இருக்கும். ஆனால், அதனை வழவழப்பான பரப்பின்மீது எளிதாக நகர்த்த முடியும். ஏனெனில், பரப்பைப் பொருத்து உராய்வு வேறுபடுகிறது.
 
. பொருளின் எடை:
 
மிதி வண்டியின் பின்புறம் எவ்வித பளுவும் ஏற்றப்படாதபோது மிதிவண்டியை ஓட்டுவது எளிதாக இருக்கும்.
 
ஆனால், அதன் எடை பளு ஏற்றப்பட்டவுடன் அதிகரிக்கிறது. இதனால் சாலைக்கும் மிதிவண்டியின் சக்கரத்திற்கும் இடையேயான உராய்வு அதிகரிக்கிறது. எனவே, மிதிவண்டியை ஓட்டுவது கடினம்.
 
. தொடு பரப்பு:
 
ஒரு குறிப்பிட்ட எடை உள்ளபோது,  ஒன்றையொன்று தொடும் இரு பரப்புகளின் பரப்பளவைப் பொருத்து உராய்வு இருக்கும். தொடு பரப்பு அதிகமாக இருந்தால் உராய்வும் அதிகமாக இருக்கும்.
 
சாலை உருளியின் (Road roller) உருளை அதிக தொடுபரப்பைப் பெற்றுள்ளதால், அது அதிக உராய்வைத் தருகிறது. ஆனால், மிதி வண்டியின் மெல்லிய சக்கரத்தின் தொடு பரப்பு சிறியதாக இருப்பதால் அது குறைவான உராய்வைப் பெறுகிறது.