PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoநமது அன்றாட வாழ்வில் பலவிதமான பொருட்களை நாம் சந்திக்கிறோம். அவற்றில் சில பொருள்கள் இயங்குகின்றன. சில பொருள்கள் ஓய்வு நிலையில் உள்ளன.
Example:
உதாரணமாக, ஒரு பந்து உதைக்கப்படும் போது, அது அதன் ஓய்வு நிலையில் இருந்து நகர்கிறது. அதேபோல, அசையும் பொருட்களை நாம் தள்ளும்போது அல்லது இழுக்கும்போது, அவை நகரத் தொடங்கும்.
இந்த இழுக்கும் அல்லது தள்ளும் செயலே விசை எனப்படும்.
ஒரு குறிப்பிட்ட பரப்பில் செயல்படும் விசையால் அழுத்தம் உருவாக்கப்படுகிறது.
உதாரணமாக, நாம் சுவரில் ஒரு ஆணியை அடிக்கும் போது, அது அழுத்தத்தை உண்டாக்குகிறது.
அனைத்து திடப்பொருட்கள், திரவங்கள் மற்றும் வாயுக்களும் அழுத்தத்தைச் செலுத்துகின்றன. திரவங்கள் மற்றும் வாயுக்களால் செலுத்தும் அழுத்தம் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
திரவங்களின் அழுத்தத்தினால் நீரியல் தூக்கி மற்றும் நீரியல் வேகத்தடை ஆகியவை செயல்படுகின்றன.
இந்தப் பாடத்தில் விசை மற்றும் அழுத்தம் பற்றி கற்க இருக்கிறீர்கள். மேலும், பரப்பு இழுவிசை மற்றும் பாகுவிசை பற்றியும் கற்க இருக்கிறீர்கள்.