PDF chapter test TRY NOW
நம் அன்றாட வாழ்வில் கதவைத் திறத்தல், கால்பந்தை உதைத்தல், கேரம் விளையாட்டில் நாணயங்களைச் சுண்டுதல் போன்ற பல்வேறு செயல்களை நாம் செய்கிறோம்.
கதவைத் திறத்தல்
கால்பந்தை உதைத்தல்
கேரம் விளையாட்டில் நாணயங்களைச் சுண்டுதல்
இவற்றைப் போன்ற செயல்களைச் செய்வதற்கு ஒரு புறக்காரணி தேவைப்படுகிறது. இந்தப் புறக்காரணியே விசை எனப்படும்.
விசையானது இயக்கத்திலுள்ளப் பொருளை ஓய்வு நிலைக்கோ அல்லது ஓய்வு நிலையிலுள்ளப் பொருளை இயக்கத்திற்கோ கொண்டு வர முடியும்.
விசையால் ஒரு சிலப் பொருள்களின் உருவம் மற்றும் வடிவங்களையும் மாற்ற முடியும்.
ஒரு பொருளின் ஓய்வுநிலையை அல்லது சீரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பொருளின் இயக்கநிலையை அல்லது இயங்கும் பொருளின் திசையை அல்லது பொருளின் வடிவத்தை மாற்றக்கூடிய புறக்காரணியே விசை என வரையறுக்கப்படுகிறது.
விசை எண்மதிப்பும், திசையும் கொண்டுள்ளதால் ஒரு வெக்டர் அளவு ஆகும். இது நியூட்டன் (\(N\)) என்ற அலகால் அளக்கப்படுகிறது.
Reference:
https://pxhere.com/en/photo/952090