
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபரப்பு இழுவிசை
பரப்பு இழுவிசை என்பது திரவங்களின் ஒரு பண்பு ஆகும். திரவ மூலக்கூறுகள் தங்களால் இயன்ற அளவு மீச்சிறு புறப்பரப்பைக் கொண்டிருக்கும்படி அவற்றின் மீது ஒரு விசை செயல்படுகிறது.
திரவத்தின் புறப்பரப்பில் ஓரலகு நீளத்திற்கு செங்குத்தாக செயல்படும் விசை பரப்பு இழுவிசை என வரையறுக்கப்படுகிறது.
இதன் அலகு \(Nm^{-1}\)
பரப்பு இழுவிசையின் பயன்பாடுகள்
அன்றாட வாழ்வில் நாம் காணும் பல்வேறு நிகழ்வுகளுக்கு பரப்பு இழுவிசையே காரணமாகும்.
- தாவரங்களில் பரப்பு இழுவிசை காரணமாக, நீர் மேலே செல்கிறது. தாவரங்களில் சைலம் எனப்படும் மிக நுண்ணிய குழாய்கள் காணப்படுகின்றன. இத்திசுக்குழாய்கள் வழியே தாவரங்களின் வேர்கள் மூலம் உறிஞ்சப்படும் நீர் மூலக்கூறுகள் நுண்புழை ஏற்றம் காரணமாக மேல்நோக்கிச் செல்கின்றன. இதற்கு நீரின் பரப்பு இழுவிசையே காரணமாக அமைகிறது.
- நீரின் பரப்பு இழுவிசை காரணமாக கடுமையான புயல்காற்றின்போது கப்பல்கள் சேதமடைகின்றன. அதன் தாக்கத்தை தூள் அல்லது எண்ணெயை நீரில் பரப்புவதன் மூலம் மாலுமிகள் குறைக்கின்றனர்.
- நீர்ச்சிலந்தியானது நீர்ப்பரப்பின்மீது நீரின் பரப்பு இழுவிசை காரணமாக எளிதாக நகர்ந்து செல்கிறது.
