PDF chapter test TRY NOW
ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பி, அதன் மீது மெல்லிய உறிஞ்சு தாளை வைக்கவும்.
ஒரு காகிதப் பிடிப்பு ஊசியினை (paper clip) உறிஞ்சு தாளின் மீது மெதுவாக வைக்கவும். சிறிது நேரம் கழித்து காகிதப் பிடிப்பு ஊசி மூழ்குகிறதா என்பதை உற்று நோக்கவும்.
சில நிமிடங்களுக்குப் பிறகு உறிஞ்சு தாள் நீரில் மூழ்குகிறது.
காகிதப் பிடிப்பு ஊசி நீரைக் காட்டிலும் அதிக அடர்த்தியைப் பெற்றிருந்த போதிலும், அது நீரில் சிறிது மூழ்கிய நிலையில் மிதக்கத் துவங்குகிறது.
இது எவ்வாறு நடைபெறுகிறது?
நீரின் மேற்பரப்பில் உள்ள நீர் மூலக்கூறுகள் தங்களது பரப்பை இழுத்துக் கட்டப்பட்ட ஒரு சவ்வைப் போன்று குறைத்துக் கொள்கின்றன. அவற்றின்மீது செயல்படும் விசை நீரின் பரப்புவிசையைக் குறைக்க முயற்சிக்கிறது.
இந்த பரப்பு இழுவிசையின் காரணமாக, நீரின் மேற்பரப்பில் உள்ள மூலக்கூறுகள் மீட்சித்தன்மை உடைய சவ்வு போன்று செயல்படுவதால் காகிதப் பிடிப்பு ஊசி மூழ்காமல் மிதக்கிறது.
மழைத்துளிகள் இயற்கையாகவே கோள வடிவத்தைப் பெற்றிருப்பது ஏன் என்று சிந்தித்து இருக்கிறீர்களா?
மரங்கள் மற்றும் தாவரங்களில் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக வேரிலிருந்து நீர் எவ்வாறு மேலே செல்கிறது?
இவை யாவும் பரப்பு இழுவிசை காரணமாகவே நடைபெறுகின்றன.