PDF chapter test TRY NOW

திரவங்களில் விசை மற்றும் அழுத்தம்:
 
ஒரு பொருள், நீரில் முழுமையாகவோ அல்லது ஓரளவிற்கோ மூழ்கியிருக்கும் போது, அப்பொருளானது சுற்றியுள்ள நீரினால் மேல்நோக்கிய உந்து விசையை உணர்கிறது என்று நாம் பார்த்தோம்.
 
மேலும் திரவங்களின் கீழ்ப்பகுதிகளில் உள்ள அழுத்தம் மேற்பகுதியில் உள்ளதை விட அதிகமாக உள்ளது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த அழுத்த வேறுபாடு தான், அப்பொருள் மீது ஒரு விசையைச் செலுத்தி அப்பொருளை மேல்நோக்கி உந்துகிறது.
 
இந்த விசையை மிதப்பு விசை (Buoyant force) என்றும், இந்த நிகழ்வானது மிதப்புத் தன்மை (Buoyancy) என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வு மிதத்தல் எனப்படுகிறது. இந்த விசையைத் திரவங்கள் மட்டுமே செலுத்துவது இல்லை. வாயுக்களும் செலுத்துகின்றன.
 
5.png
 
ஒரு பொருள் மிதப்பதை அல்லது மூழ்குவதை இந்த மேல்நோக்கு விசையே தீர்மானிக்கிறது. ஒரு பொருளின் எடை மேல்நோக்கு விசையை விட குறைவாக இருந்தால் அப்பொருளானது மிதக்கும்; இல்லையெனில் மூழ்கிவிடும்.
 
3.png