PDF chapter test TRY NOW
நம்மைச்சுற்றியுள்ள பகுதி முழுவதிலும் காற்று நிரம்பியுள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். காற்று நிரம்பியுள்ள இந்த உறைக்கு 'வளிமண்டலம்’ என்று பெயர்.
வளிமண்டலம் புவியின் புறப்பரப்பிற்கு மேலாக பல கிலோமீட்டர் வரை நீண்டு காணப்படுகிறது. இந்த வளிமண்டலம் காரணமாக புவிப்பரப்பில் உள்ள அனைத்துப் பொருள்களும் உந்து விசை அல்லது விசையை உணர்கின்றன.
புவியின் ஓரலகு புறப்பரப்பின்மீது கீழ்நோக்கி செயல்படும் வளிமண்டல விசை அல்லது எடை வளிமண்டல அழுத்தம் எனப்படும்.
பாதரசமானி என்ற கருவியால் இது அளக்கப்படுகிறது. டாரிசெல்லி என்ற அறிவியல் அறிஞர் இதனைக் கண்டறிந்தார்.
பாதரசமானி
வளிமண்டல அழுத்தமானது புவிப்பரப்பின் மேலிருந்து, உயரம் அதிகரிக்கும் போது குறைகிறது. வளிமண்டல அழுத்தம் பாதரசமானியின் தம்பத்தில் உள்ள பாதரசத்தின் உயரத்தைக்கொண்டு அளவிடப்படுகிறது.
திரவத்தம்பத்தின் பாதரச உயரமானது கொடுக்கப்பட்ட நேரத்தில் ஒரு இடத்தின் வளிமண்டல அழுத்தத்தைக் குறிக்கிறது. பாதரசமானியை வெவ்வேறு கோணங்களில் சாய்த்தாலும் திரவத்தம்பத்தின் பாதரச உயரம் மாறாது.
கடல் மட்டத்தில் பாதரசத்தின் அழுத்தம் \(760\) \(mm\) ஆகும்.
பாதரசத்தின் அடர்த்தி \(13600\) கிகி மீ\(^{-3}\)ஆகும்.
திரவத்தம்பத்தில் உள்ள பாதரசத்தின் மீது காற்று செலுத்தும் அழுத்தத்தின் எண் மதிப்பு ஒரு வளிமண்டல அழுத்தம் (\(1\ atm\)) எனக் கருதப்படுகிறது.
வளிமண்டல அழுத்தத்திற்குச் சமமான \(760\) மிமீ பாதரச தம்பத்தினால் ஏற்படும் அழுத்தத்தை இப்பொழுது கணக்கிடுவோம்.
இதை வளிமண்டல அழுத்தம் (\(atm\)) என்கிறோம். இதற்கு பார் (\(bar\)) என்ற மற்றொரு அலகும் உள்ளது. இவ்வலகு அதிகமான அழுத்த மதிப்புகளைக் குறிப்பிடப் பயன்படுகிறது.
வளிமண்டல அழுத்தத்தின் SI அலகு அல்லது பாஸ்கல்.