PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
II. பாக்டீரியா:
பாக்டீரியாவை கண்டறிந்தவர்  அன்டன் வான் லீவன்ஹாக். இது \(0.5-5.0\) µm அளவுடையவை. இவை புரோகேரியாட் எனப்படும் நிலையான உட்கரு அற்ற நியுக்ளியாய்டு என்னும் பொருளால் ஆனவை.
 
bac.jpg
பாக்டீரியா அமைப்பு
 
பாக்டீரியாக்களில் நுண்ணுறுப்புகள் (மைட்டோகாண்ட்ரியா, கோல்கை உடலம், எண்டோபிளாஸ்மிக் வலைப்பின்னல்) காணப்படுவதில்லை. இவை, கசையிழையினால் இடப்பெயர்ச்சி செய்கின்றன. இவை \(70S\) வகை ரைபோசோம்களை கொண்டுள்ளன.
 
Important!
  • பாக்டீரியாக்கள் மொனிரா வகைபாட்டைச் சேர்ந்தவை.
  • பாக்டீரியா பற்றிப் படிக்கும் பிரிவு "பாக்டீரியாலஜி" ஆகும்.
பாக்டீரியாவின் வகைகள்:
  • செல் வடிவம் அடிப்படையில்
  • கசையிழை அடிப்படையில்
  • உணவூட்ட முறை அடிப்படையில்
  • சுவாசம் அடிப்படையில்
(i) செல் வடிவம் அடிப்படையில்:
  • பேசில்லை - கோல் வடிவ பாக்டீரியா. எ.கா.பேசில்லஸ் ஆந்திராசிஸ்
  • காக்கை - கோள அல்லது பந்து வடிவ பாக்டீரியா. எ.கா. டிப்ளோகாக்கஸ் - இணைகளாக இருப்பவை; ஸ்ட்ரெப்டோகாக்கஸ் - சங்கிலி வடிவில் இருப்பவை; ஸ்டைபைலோகாக்கஸ்  - கொத்து வடிவம் கொண்டவை.  
  • ஸ்பிரில்லா - சுருள் வடிவ பாக்டீரியா. எ.கா.ஹெலிகோபாக்டர் பைலோரி
  • விப்ரியோ - கமா வடிவ பாக்டீரியா. எ.கா. விப்ரியோ காலரே
shutterstock_426478195.png
செல் வடிவம் அடிப்படையில் பாக்டீரியாவின் வகைகள்
 
(ii) கசையிழை அடிப்படையில்:
  • ஒற்றைக்கசையிழை - ஒரு முனையில் மட்டும் ஒரு கசையிழை இருப்பது. எ. கா.விப்ரியோ காலரே
  • ஒருமுனை கற்றைக் கசையிழை - ஒருமுனையில் மட்டும் கற்றையாகக் காணப்படும். எ. கா.சூடோமோனாஸ்
  • இருமுனை கற்றைக் கசையிழை - இருமுனைகளிலும் கற்றையாகக் காணப்படும். எ. கா.ரோடோஸ்பைரில்லம் ரூபரம்
  • சுற்றுக் கசையிழை - உயிரினத்தைச் சுற்றிக் காணப்படும். எ.கா.எ. கோலை
  • கசையிழை அற்றவை - எ. கா. கோரினிபாக்டீரியம் டிப்தீரியா
shutterstock_1680151279.png
கசையிழை அடிப்படையில் பாக்டீரியாவின் வகைகள்
 
(iii) உணவூட்ட முறை அடிப்படையில்:
  • ஒளிச்சேர்க்கை முறை - எ.கா.சயனோபாக்டீரியா
  • வேதித் தற்சாற்பு முறை - எ.கா.எ.கோலை
  
(iv) சுவாசத்தின் அடிப்படையில்:
  • காற்று சுவாச பாக்டீரியா - சுவாசத்திற்கு ஆக்ஸிஜன்தேவைப்படும். எ.கா.சயனோபாக்டீரியா
  • காற்றில்லா சுவாச பாக்டீரியா - சுவாசத்திற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவதில்லை. எ. கா.ஆக்டினோமைசிட்ஸ் 
பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்: 
நோய்கள்
நுண்ணுயிரி
பரவும் 
முறை
அறிகுறி
தடுப்பு
முறை
காசநோய்
மைக்ரோபாக்டீரியம்
டுபர்குலோசிஸ் 
காற்று
இருமல், ரத்ததுடன்
கூடிய சளி
\(BCG\) தடுப்பூசி
காலரா
விப்ரியோ
காலரே
ஈக்கள், நீர்
வயிற்று போக்கு,
வாந்தி
காலராவுக்கு
எதிரான தடுப்பூசி
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Simple_diagram_of_bacterium_(en).svg