PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நுண்ணுயிரி வெற்றுக் கண்ணுக்குத் தெளிவாகப் புலப்படாத, நுண்ணோக்கியின் உதவியால் மட்டுமே பார்க்கக் கூடிய மிகச் சிறிய உயிரினம் ஆகும்.
நுண்ணுயிரிகள்பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவிற்கு நுண்ணுயிரியியல் எனப்படுகிறது. இவைகள் எல்லா விதமான சூழ்நிலைகளிலும் வாழக்கூடிய செயல்திறன் பெற்ற உயிரினங்கள் ஆகும்.
 
நுண்ணுயிரிகளின் வகைகள்:
 
நுண்ணுயிரிகள் ஒட்டுமொத்தமாக \(5\) வகைப்படும். அவைகள் பின்வருமாறு,
  • வைரஸ்
  • பாக்டீரியா
  • ஆல்கா
  • புரோட்டோசோவா
  • பூஞ்சை
PPT.jpg
நுண்ணுயிரிகளின் வகைகள்
I. வைரஸ்:
வைரசைக் கண்டறிந்தவர் டிமிட்ரி இவனோவ்ஸ்க்கி ஆவார். வைரஸ்கள் உயிருள்ள மற்றும் உயிரற்ற உயிரனங்களுக்கு இடைப்பட்டவை, ஏனெனில் இவைகள் செல்லுக்குள்ளே மட்டும் வாழக்கூடிய கட்டாய ஓட்டுண்ணிகளாகும்.
இலத்தீன் மொழியில் வைரஸ் என்பதன் பொருள் 'விஷம்' ஆகும். மேலும், இவைகள் பாக்டீரியாவை விட \(10,000\) மடங்கு மிகச் சிறியவை.
வைரஸ்கள் புரதங்களால் ஆன உறையினால் உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் இப்புரதயைச் சுற்றி கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் ஆகியவற்றாலான மற்றொரு உறை உள்ளது. இந்த உரையில் பல கூர்முனை (spike) எனப்படும் அமைப்புகள் ஓம்புயிரியின் செல்களில் ஒட்டிக் கொள்ள உதவுகின்றன.
 
shutterstock_1663543132.jpg
வைரஸ்கள்
 
இனப்பெருக்கம் செய்வதற்கான  நுண்ணுறுப்பு  கட்டமைப்பு இல்லாததால் அவற்றால் தாமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது, எனவே இவைகளால் ஒரு செல்லுக்குள்தான் வளரவும் பெருகவும் முடியும்.
  
Important!
உங்களுக்கு தெரியுமா!!!
  • வைரஸ்கள் மரபணுகளின் அடிப்படையில் டி.என்.ஏ. (DNA) வைரஸ் அல்லது ஆர்.என்.ஏ. (RNA) வைரஸ் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • வைரஸ்கள் பற்றிய பிரிவிற்கு "வைராலஜி" ஆகும்.
வைரஸ்களின் பண்புகள்:
வைரஸ்கள் இருவிதமான பண்புகளைக் கொண்டுள்ளன. அவைகள் பின்வருமாறு,
 
உயிருள்ள பண்புகள்
உயிரற்ற பண்புகள்
வேதியியல் வினைகளுக்கு எதிர்வினை புரிகின்றன.
தன்னிச்சையான சூழலில் செயல்படும் திறன் அற்றவை.
உயிருள்ள செல்களுக்குள் மட்டுமே இனப்பெருக்கம் செய்யமுடியும்.
செல்லுக்கு வெளியே இவைகளை படிக்கமாக்க இயலும்.
 
தொற்று பரவுதலை மூன்றாக பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக்.
  • எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமாலும் பரவக்கூடிய நோயாகும். எ.கா. அம்மை
  • எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாக பரவக்கூடிய நோயாக இருக்கும். எ.கா. காய்ச்சல் 
  • பாண்டமிக் வகையை சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். எ.கா. கொரோனா
வைரஸால் ஏற்படும் நோய்கள்:
நோய்கள்
 நுண்ணுயிரி
 பரவும் முறை
அறிகுறிகள்
தடுப்பு முறை
சாதாரண சளிஇன்ஃப்ளுயென்ஸா வைரஸ்  காற்றுசளி ஒழுகுதல், தும்முதல்
நோயாளிகளை
தனிமைப்படுத்துதல்
ரேபிஸ்ரேபிட்டோ விரிடிவிலங்குகள்காய்ச்சல், மாய தோற்றம், பக்கவாதம் ரேபிசுக்கு எதிரான தடுப்பூசி