PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ரொட்டி தயாரிப்பு
  
நொதித்தல் முறையில், காற்றில்லா  சுவாச பாக்டீரியாக்கள், மாவை எழும்பாக்க செய்வதால் கார்பன்-டை-ஆக்ஸைடு (\(CO_2\)) உருவாகுகிறது.  \(CO_2\) ரொட்டி மற்றும் கேக்குகிற்கு மிருதுத் தன்மையைக் கொடுக்கிறது. மேலும், குளோரெல்லா ரொட்டியின் சத்தினை அதிகரிக்கின்றது.
 
shutterstock_736143133.jpg
ரொட்டி தயாரிப்பு
 
தயிர் மற்றும் பன்னீர் தயாரிப்பு
 
பாலில் உள்ள லக்டோஸ் (Lactose), லாக்டிக் அமிலமாக (Lactic acid) மாறுவதன் மூலம், தயிர் மற்றும் பன்னீர் தயாரிக்கப்படுகிறது. இதற்கு, லேக்டோ பேசில்லஸ்  எனும் பாக்டீரியா உதவி புரிகிறது
 
மனிதக் குடலில் நுண்ணுயிரிகள்
  • லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபில்ஸ் எனும் பாக்டீரியா உணவு செரிமானத்திற்கும், தீங்கு தரும் கிருமிகளுக்கு எதிராகவும் செயல்படுகிறது.
  • மனிதனின் கூடலில் எ. கோலை (E. coli) எனும் பாக்டீரியம் வாழ்கிறது. இது, வைட்டமின் \(K\) மற்றும் \(B\) கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன.
shutterstock_1649015524.jpg
மனிதனின் குடலில் வாழும் நுண்ணுயிரிகள்
உணவு தயாரிப்பில் நுண்ணுயிரிகள்
உணவு தயாரிப்பில் நுண்ணுயிரிகள் பயன்படுத்தப்படுகின்றன, என பார்த்தோம். இனி, தாயரித்த உணவினைப் பாதுகாப்பதும் மிக முக்கியம். அவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
I. உணவு பதப்படுத்துதல்
மேலும், தயாரித்த உணவுப் பொருள்களைக் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு, பதப்படுத்தல் மிக அவசியம் ஆகும். இதற்கு பல தொழில்நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றன.
  • பாரம்பரிய நுட்பங்கள்
  • நவீன நுட்பங்கள்
1. பாரம்பரிய தொழில்நுட்பங்கள்
  • நொதித்தல்
  • உறைய வைத்தல்
  • கொதிக்க வைத்தல்
  • இனிப்பிடுதல்
PPT (6).png
பாரம்பரிய நுட்பங்கள்
 
(i) நொதித்தல் - ஸ்டாரச் மற்றும் சர்க்கரையை நுண்ணுயிரிகள் ஆல்கஹாலாக மாற்றுகின்றன.
 
(ii) உறைய வைத்தல் - வினிகர், ஆல்கஹால் மற்றும் தாவர எண்ணெய் உள்ள திரவத்தில் உற வைப்பதால் நுண்ணுயிரிகளால் உணவுப் பொருள்கள் கெட்டுப் போகமால் பாதுகாக்கப்படுகிறது.
 
(iii) கொதிக்க வைத்தல் - திரவ உணவுப் பொருள்களைக் கொதிக்க வைப்பதன் மூலம் உணவைப் பாதுகாக்கலாம். 
 
(iv) இனிப்பிடுதல் - சர்க்கரையை பழங்களுடன் சேர்க்கும்போது அவை உலர்ந்த திலையில் பாதுகாக்கப்படுகின்றன.
 
2. நவீன தொழில்நுட்பங்கள்
 
பதப்படுத்துதல் (Pasteurization)
 
பால் போன்ற திரவப் பொருள்களைப் பாதுகாக்க பயன்படுத்தப்படும் முறையாகும். லூயிஸ் பாஸ்டர், \(1862ல்\) இம்முறையினைக் கண்டறிந்தார். இம்முறையின் மூலம், பாலினை \(70°C\) வெப்பநிலையில் கொதிக்க வைக்கப்பட்டு, மீண்டும் பாக்டீரியாக்கள் வளராமல் தடுக்க \(10°C\) வெப்பநிலைக்கு குளிரவைக்கப்படுகிறது. பிறகு, நுண்ணியிர்கள் நீக்கம் செய்யப்பட்ட குவலைகளில் அடைக்கப்பட்டு குளிர்ச்சியான இடங்களில் சேமித்து வைக்கப்படுகிறது.
 
shutterstock_1793163517.png
பதப்படுத்துதல்
II. உணவு தயாரிப்பு - புரோபயாட்டிக்குகள்
புரோபயாட்டிக்குகள், என்பது பால் பொருள்களில் கூடுதலாக பயன்படுத்தப்படும் கூட்டுப் பொருளாகும். எடுத்துகாட்டாக,  லாக்டோபேசில்லஸ் அசிட்டோஃபில்ஸ் மற்றும் பைபிடோபாக்டீரியம் பைபிடம் ஆகியவற்றின் நன்விளைவுகளை பின்வருமாறு காணலாம்.
 
PPT (5).jpg
புரோபயாட்டிக்குகள் மற்றும் புரோபயாட்டிக்குகள் நிறைந்த உணவுப் பொருள்கள்
  • குடல் புற்றுநோய் வராமலும், மேலும் அதன் ஆபத்தினைக் குறைக்கின்றன.
  • அதிகமான கொலஸ்ட்ரால் உறிஞ்சபடுவதைக் குறைக்கின்றன.
  • நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.