PDF chapter test TRY NOW

மருத்துவம்
(i) எதிர்உயிர்க்கொல்லிகள் (ஆன்டிபயாட்டிக்)
  
shutterstock_1030471729.jpg
ஆன்டிபயாட்டிக்
 
மருத்துவத்தில் ஆன்டிபயாட்டிக்காக பெனிசிலியம் (பெனிசிலியம் கிரைசோஜீனம்) பயன்படுத்தபடுகிறது. சர் அலெக்ஸாண்டர் பிளாம்மிங் என்பவர், \(1928ல்\) பெனிசிலியத்தைக் கண்டறிந்தார். மேலும், இது டெட்டனஸ் மற்றும் டிப்தீரியாவை குணப்படுத்துகிறது.
 
PPT (4).png
பெனிசிலியம்
 
ஸ்டெப்ரோமைசின், ஸ்டெப்ரோமைசிஸ் என்ற பாக்டீரியாவில் இருந்து எடுக்கபடுகிறது. இது, பிளேக் நோயை குணப்படுத்துகிறது.
  
(ii) தடுப்பூசிகள்
தடுப்பூசிகள் என்பது இறந்து போன அல்லது பலவீனமாக்கப்பட்ட நுண்ணுயிரிகளிலிருந்து தயாரிக்கப்படுவது ஆகும்.
எட்வர்ட் ஜென்னர் பெரியம்மைக்கான தடுப்பூசியினைக் கண்டறிந்தார்.
 
PPT (5).png
தடுப்பூசி
  • தட்டம்மை,  பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா ஆகிய நோய்களுக்காக (\(MMR\) - Measles, Mumps, Rubella)
  • காசநோய்க்கு (\(BCG\) - Bacille Calmette-Guerin)
விவசாயம்
(i) இயற்கை உரம்
 
சிதைப்பவைகள் எனப்படும் நுண்ணுயிரிகளால்  நைட்ரேட்டுகள், கனிம ஊட்டப் பொருள்கள் மட்கும் கழிவுகளிலிருந்து வெளியேறி, மண்ணை வளமுடையதாக்குகின்றன. இதுவே, இயற்கை உரம் ஆகும்.
 
shutterstock_601454207.jpg
இயற்கை உரம்
 
(ii) நைட்ரஜன் நிலைநிறுத்தம்
 
லெகும்னஸ் (leguminous) எனப்படும், சில பயறு வகைத் தாவரங்களில் அதன் வேர் முடிச்சுகளில் சில வகையான பாக்டீரியாக்கள் வளிமண்டல நைட்ரஜனை அத்தியாவாசியமான நைட்ரேட்டுகளாக மாற்றி மண்ணில் நிலைநிறுத்துகின்றன. இந்த நைட்ரேட்டுகள் தாவரங்களுக்கு மிக சிறந்த ஊட்டச்சத்தாக உள்ளது.
 
shutterstock_100488352.jpg
நாஸ்டாக் 
Example:
நாஸ்டாக் , சயனொ பாக்டீரியா
(iii) உயிரி-கட்டுப்பாட்டுக் காரணிகள்
 
பயிர்களை தீங்குயிரிகளிடமிருந்து பாதுகாக்க நுண்ணுயிரிகள் உதவுகின்றன. அவற்றில் சில பின் வருமாறு:
  • பேசில்லஸ் துரின்ஞியன்ஸிஸ் (\(Bt\) பஞ்சு)
  • டிரைக்கோடெர்மா (பூஞ்சை)
  • பாக்குலோ வைரஸ்கள் (வைரஸ்) - பூச்சிகள் மற்றும் காணுக்காலிகள் 
தொழிற்சாலை
(i) கழிவுநீர் சுத்திகரிப்பு
 
நைட்ரோபாக்டர் கழிவுநீர் சுத்திகரிப்பின் இரண்டாம் நிலையில் கழிவுநீரில் உள்ள கரிமப் பொருள்களை நீக்கப் பயன்படுத்தபடுகின்றன. இது, காற்று சுவாச முறையில் வளரச் செய்யப்படுகின்றன. ஆனால், மெத்தனோ பாக்டீரியம் காற்றில்லா முறையில் சுத்திகரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 
(ii) உயிரி - வாயு உற்பத்தி
 
மெத்தனோஜென்கள், மனிதன் மற்றும் விலங்குகளின் மலக்கழிவுகலிருந்து மீத்தேன் உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. மீத்தேனுடன் சேர்ந்து கார்பன்-டை-ஆக்சைடும், ஹைட்ரஜனும் உற்பத்தியாகின்றன.
 
(iii) ஆல்கஹால் மற்றும் திராட்சை ரசம் தயாரிப்பு
 
திராட்சை, அரிசி மற்றும் பார்லி போன்ற தானியங்களிலுள்ள சர்க்கரையை நொதித்தல் முறையில் ஈஸ்ட்டின் (Saccharomyces cerevisiae) உதவியோடு ஆல்கஹால் தயாரிக்கபடுகிறது.
 
shutterstock_1972920839.jpg
ஆல்கஹால் மற்றும் திராட்சை ரசம் தயாரிப்பு
 
(iv) மிருதுவாக்குதல்
 
லினென் நூல் இழைகள், சூடோமோனாஸ் ஏருஜினோஸா ஆளித் தாவரங்களின் வலிமையான நார்களைத் தளரத்துவயதால் தாயரிக்கப்படுகின்றன.   
 
(v) தோல் பதனிடுதல
 
பாக்டீரியா, விலங்குகளின் தோலின் மீது செயல்பட்டு, அதனை மென்மையாக்குவதன் மூலம், அவை வளைந்துகொடுக்கும் தன்மையை அடைகின்றன.