PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இவை கடத்துத் திசுக்களைக் கொண்ட முதல் மற்றும் உண்மையான நிலத் தாவரங்களாகும். எனவே, இவை கடத்துத் திசுக்களைக் (சைலம் மற்றும் புளோயம்) கொண்ட பூவாத் தாவரங்கள் எனப்படுகின்றன.  . 
 
இந்த தாவரங்களின் முக்கிய உடல் உண்மையான வேர்கள், தண்டுகள் மற்றும் இலைகள் என நன்கு வேறுபடுகிறது.

pteridophytesw3258.jpg
டெரிடோபைட்டுகளின் சில எடுத்துக்காட்டுகள்
இனப்பெருக்கம்
டெரிடோபைட்டுகளிலும் சந்ததி மாற்றம் நடைபெறுகிறது. இருமய ஸ்போரோஃபைட் நிலையானது ஒருமய கேமீட்டோஃபைட் நிலையுடன் மாறி மாறிக் காணப்படுகிறது.
ஸ்போரோஃபைட்டானது ஸ்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. ஸ்போரோஃபைட் சந்ததி ஓங்குதன்மை கொண்டது. 
பெரும்பாலான தாவரங்கள் ஹோமோஸ்போரஸ் எனப்படும் ஒரே ஒரு வகை ஸ்போரை மட்டுமே உற்பத்தி செய்கின்றன (அதாவது மைக்ரோஸ்போர் அல்லது மெகாஸ்போர்). இருப்பினும், சில தாவரங்களில், இரண்டு வகையான ஸ்போர்களையும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை தாவரங்கள் ஹெட்டிரோஸ்போரஸ் என்று அழைக்கப்படுகின்றன.
 
Design - YC IND (15).png
டெரிடோபைட்டுகளின் இனப்பெருக்கச் சுழற்சி

ஸ்போரோஃபைட்டால் உற்பத்தி செய்யப்படும் ஸ்போர் முளைத்து புரோதாலஸ் எனப்படும் கேமோட்டோபைடிக் தலைமுறையை உருவாக்குகின்றன.
புரோதாலஸ் தன்னிச்சையாக, குறுகிய நாள் வாழக்கூடியது.
கேமோட்டோபைட்டுகள் பல செல்கள் கொண்ட இனப்பெருக்க உறுப்புகளை உருவாக்குகின்றன.
 
  • ஆண் இனச்செல்ஆந்திரீடியம் நகரக் கூடிய ஆண் இனச்செல்லை உற்பத்தி செய்கிறது.
  • பெண் இனச்செல்ஆர்க்கிகோனியம் முட்டையை உற்பத்தி செய்கிறது.
 
கருவுறுதலின்போது நகரக் கூடிய ஆண் இனச்செல்  முட்டையுடன் இணைந்து இருமய கரு முட்டையை உற்பத்தி செய்து  கருவாக மாற்றமடைகிறது. அது மீண்டும் ஸ்போரோஃபைட்டாக வளர்ச்சி அடைகிறது.
வகைப்பாடு
  • சைலாப்சிடா (எ.கா. சைலோட்டம்)
  • லைக்காப்சிடா (எ.கா. லைக்கோபோடியம்)
  • ஸ்பீனாப்சிடா (எ.கா. ஈகுசீட்டம்)
  • டீராப்சிடா (எ.கா.நெஃப்ரோலெப்பிஸ்)
Designing - Editorial (3).png
மேலிருந்து வலது புறமாக: சைலாப்சிடா, லைக்காப்சிடா, ஸ்பீனாப்சிடா, டீராப்சிடா
பொருளாதார முக்கியத்துவம்
  1. மருந்துகள்: டிரையோப்டெரிஸ் விளைச்சலின் வேர்த்தண்டுக்கிழங்கு மற்றும் இலைக்காம்புகள் ஒரு குடற்புழு நீக்கி மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.
  2. உணவு: மார்சிலியாவின்  ஸ்போரகக் கனிகள் சிலரால் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.
  3. அலங்கார பொருட்கள்: பெரணிகள் அலங்கார தாவரங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன (முக்கியமாக அவற்றின் இலைகள்).
  4. நைட்ரஜன் நிலைப்படுத்தல்: அசோலா, சயனோபாக்டீரியத்துடன் ஒரு கூட்டுவாழ்வை உருவாக்குகிறது மற்றும் பாக்டீரியாவை சரிசெய்ய உதவுகிறது.
Important!
உங்களுக்கு தெரியுமா!
  • லைக்கோபோடியம், கிளப் மாஸ் எனப்படுகிறது.
  • ஈக்விசிட்டம்குதிரை வால் எனப்படுகிறது.
பிரையோபைட்டுகளுக்கும் டெரிடோபைட்டுகளுக்கும் உள்ள வேறுபாடு
பிரையோபைட்ஸ்
டெரிடோஃபைட்ஸ்
தாவர உடலை வேர், தண்டு மற்றும் இலை என வேறுபடுத்த முடியாது.
தாவர உடலை வேர், தண்டு மற்றும் இலை என வேறுபடுத்தலாம்.
இந்த தாவரங்கள் நிலம் மற்றும் நீர் இரண்டிலும் வாழ்கின்றன. எனவே, இவை தாவர உலகத்தின் இருவாழ்விகள் என்று அழைக்கப்படுகின்றன.
இவை உண்மையான நில தாவரங்கள்.
சைலம் மற்றும் புளோயம் போன்ற கடத்தும் திசுக்கள் இல்லை.
சைலம் மற்றும் புளோயம் போன்ற கடத்தும் திசுக்கள் உள்ளன.
கேமோட்டோபைடிக் நிலையானது ஆதிக்கம் செலுத்துகிறது. ஸ்போரோஃபிடிக் நிலையானது ஆதிக்கம் செலுத்துகிறது.
ஸ்போரோஃபைட் தலைமுறையானது கேமீட்டோஃபைட் தலைமுறையைச் சார்ந்துள்ளது. எ.கா. ரிக்சியாகேமீட்டோஃபைட் தலைமுறை, ஸ்போரோஃபைட் தலைமுறையைச் சார்ந்திருப்ப தில்லை. எ.கா: செலாஜினெல்லா
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Pteridophyta_in_yard.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Plant_Fern_P1120347_07.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Figure_25_00_01.jpg
https://www.flickr.com/photos/dracophyllum/3605685997
https://commons.wikimedia.org/wiki/File:Selaginella_canaliculata.jpeg
https://pixabay.com/photos/lycopodium-annotinum-lycopodium-1008522/
https://commons.wikimedia.org/wiki/File:Equisetum_arvense_foliage.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Adiantum_poiretii,_twee_fronde,_Krantzkloof_Natuurreservaat.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Pteris_sp_2878.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Dryopteris_remota_leaf_detail.jpg