PDF chapter test TRY NOW
பிரையோபைட்டுகள் வாஸ்குலர் அல்லாத பழமையான மற்றும் எளிமையான தாவரங்கள்.
இவை நிலத்தில் வளரக் கூடிய பூவாத் தாவரங்களாகும். இவற்றில் கடத்தும் திசுக்களான சைலம் மற்றும் புளோயம் இல்லை.
பிரையோபைட்டுகள் நிலத்திலும் நீரிலும் வாழ்கின்றன. எனவே, இவை தாவர உலகத்தின் இருவாழ்விகள் என்று அழைக்கப்படுகின்றன.
பிரையோபைட்டுகளின் சில எடுத்துக்காட்டுகள்
இவை சிறிய நில வாழ்த் தாவரங்கள் ஆகும். தனியான வேர்த்தொகுப்பை பெற்றிருக்காவிட்டாலும் இவை தண்டிலிருந்து தோன்றும் மெல்லிய இழைபோன்ற ரைசாய்டுகள் மூலம் வளர்தளத்தில் ஊன்றப்பட்டுள்ளன.
நீரும் கனிம உப்புக்களும் ரைசாய்டுகள் உட்பட்ட முழு தாவர உடலத்தால் உறிஞ்சப்படுகின்றன. எனவே ரைசாய்டுகளின் இன்றியமையாத பணி ஊன்றுதலே ஆகும்.
இனப்பெருக்கம்
பாலுறுப்புகள் பல செல்களால் ஆனவை. இவை மலட்டு செல்களால் ஆன ஒரு பாதுகாப்பு உறையுடன் கூடியவை. வாழ்க்கைச் சுழற்சியில் கேமிட்டோஃபைட் சந்ததியும் ஸ்போரோஃபைட் சந்ததியும் தெளிவாக மாறி மாறி வரும்.
கேமிட்டோஃபைட் சந்ததி ஓங்கிய தன்மை உடையது. தனிச்சையானது. ஸ்போரோஃபைட் சந்ததி மிகச் சிறியது, மேலும், ஸ்போரோஃபைட் சந்ததி கேமீட்டோஃபைட் சந்ததியைச் சார்ந்துள்ளது.
இவை நன்கு வளர்ச்சியடைந்த பாலின உறுப்புகளாகிய ஆந்திரிடியா மற்றும் ஆர்க்கிகோனியா ஆகியவற்றைக் கொண்டுள்ளன. பாலினப் பெருக்கம் ஊகேமஸ் (oogamous) வகையைச் சார்ந்தவை. இவை நன்கு வளர்ச்சியடைந்த பாலின உறுப்புகளாகிய ஆந்திரிடியா மற்றும் ஆர்க்கிகோனியா ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
பிரையோபைட்டுகளின் இனப்பெருக்கச் சுழற்சி
|
நீரின் உதவியால் ஆண் இன செல் நீந்திச் சென்று ஆர்க்கிகோனியாவில் உள்ள முட்டையுடன் இணைந்து கருமுட்டையை (diploid - \(2n\)) உருவாக்குகிறது. கருமுட்டையானது ஸ்போரோஃபைட் சந்ததியின் முதல் செல் ஆகும். இது குன்றல் பகுப்படைந்து (meiosis) ஒற்றை மய (haploid - \(n\)) ஸ்போர்களை உருவாக்குகிறது.
கேமீட்டோஃபைட் சந்ததியின் முதல் செல் ஸ்போர் ஆகும்.
வகைப்பாடு
பிரையோஃபைட்டுகள் மூன்று முக்கிய வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- ஹெப்பாட்டிக்கே (ஈரல் வடிவ)
- ஆந்தோசெரோட்டே (கொம்பு வடிவ) எ.கா.ரிக்ஸியா. ஆந்தோசெராஸ்
- மஸ்ஸஸ் (மாஸ்கள்) எ.கா. ஃபியூனேரியா
1. வகுப்பு: ஹெப்பாட்டிக்கே (Hepaticae)
Example:
ரிக்சியா
ஹெப்பாட்டிக்கேஎடுத்துக்காட்டுகள்
- இவை மாஸ்களை (moss) விட எளிமையானவை என்பதால் பிரையோபைட்டுகளின் கீழ்நிலைத் தாவரங்களாகும்.
- ஸ்போரோஃபைட் மிகவும் எளிமையானது.
2. வகுப்பு: ஆந்தோசெரோட்டே (Anthocerotae)
Example:
ஆந்தோசெரஸ்
ஆந்தோசெரோட்டேஎடுத்துக்காட்டுகள்
- இந்த தாவரங்களின் கேமோட்டோபைட்டுகள் வேறுபடுத்தப்படாத தாலஸைக் கொண்டுள்ளன.
- அவற்றின் வேர் வளரிகள் (ரைசாய்டுகள்) ஒரு செல்லுடன் காணப்படுகின்றன.
- ஸ்போரோஃபைட்டானது, பாதம் மற்றும் கேப்சூல் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
- புரோட்டோனீமா நிலை காணப்படுவதில்லை.
3. வகுப்பு: மாஸ்கள்
Example:
ஃபியூனேரியா
மாஸ்எடுத்துக்காட்டுகள்
- இவை உயர்நிலைத் தாவரங்கள்.
- புரோட்டோனீமா நிலை இதில் காணப்படுகிறது.
- ஸ்போரோஃபைட்டானது பாதம் (foot), சீட்டா மற்றும் கேப்சூல் எனப் பிரிக்கப்பட் டுள்ளது.
பொருளாதார முக்கியத்துவம்
- பிரையோஃபைட்டுகள் தரையின் மீது அடர்ந்து, திண்டுகள் போன்று உள்ளதால் இவை மண் அரிப்பைத் தடுக்கின்றன.
- பீட் (Peat) எனப்படுவது விலை மதிப்பற்ற எரிபொருளாகப் பயன்படுகிறது. இது ஸ்பேக்னம் எனும் தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.
- இந்த ஸ்பேக்னம் பூஞ்சை நீரை உறிஞ்சக்கூடியத் தன்மை உடையது,
- எனவே பண்ணை நாற்றங்கால்களில் பயன்படுத்தப்படுகிறது.
- மலைப் பிரதேசங்களில் மாஸ்கள் விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகின்றன.
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Riccia_sorocarpa_Riccia_glauca_050910.jpg
https://www.flickr.com/photos/copepodo/3443571009
https://commons.wikimedia.org/wiki/File:Pellia_endiviifolia_(b,_144739-474749)_2818.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Porella_platyphylla_(a,_144707-474823)_9042.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Hornwort_(3144429129).jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/a/aa/Anthoceros_agrestis_%28b%2C_150911-484827%29_6288.JPG
https://en.wikipedia.org/wiki/Sphagnum#/media/File:Sphagnum.flexuosum.jpg
https://www.flickr.com/photos/tabtannery/8539495977
https://commons.wikimedia.org/wiki/File:Polytrichum_formosum_in_nature_reserve_Skocicky_hrad_in_spring_2013_(2).JPG
https://www.flickr.com/photos/copepodo/3443571009
https://commons.wikimedia.org/wiki/File:Pellia_endiviifolia_(b,_144739-474749)_2818.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Porella_platyphylla_(a,_144707-474823)_9042.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Hornwort_(3144429129).jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/a/aa/Anthoceros_agrestis_%28b%2C_150911-484827%29_6288.JPG
https://en.wikipedia.org/wiki/Sphagnum#/media/File:Sphagnum.flexuosum.jpg
https://www.flickr.com/photos/tabtannery/8539495977
https://commons.wikimedia.org/wiki/File:Polytrichum_formosum_in_nature_reserve_Skocicky_hrad_in_spring_2013_(2).JPG