
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoதாவரங்கள் பல்வேறு வழிகளில் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் சில தாவரங்களின் அறிவியல் மற்றும் பொதுப் பெயருடன் பயன்பாடுகளையும் பின்வருமாறு காணலாம்.
அகாலிஃபா இன்டிகா (குப்பைமேனி)

குப்பைமேனி
- இது யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
- குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.
- குப்பைமேனியின் இலையை அரைத்துப் பெறப்படும் பசை, தோலில் உள்ள தீக்காயத்திற்கு மருந்தாகும்.
- இந்த தாவர இலையின் சாற்றை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அருந்தினால் வயிற்றிலுள்ள உருளைப் புழுக்கள் அழியும்.
ஏகில் மார்மிலோஸ் (வில்வம்)

வில்வம்
- இது ரூட்டேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
- தீராத வயிற்றுப்போக்கு, சீதபேதி, செரிமானக் குறைபாடுகளைச் சரி செய்கிறது.
சொலானம் டிரைலொபேட்டம் (தூதுவளை)

தூதுவளை
- இது சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
- இது இருமல், சளி, காசநோய் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
ஃபில்லாந்தஸ் அமாரஸ் (கீழா நெல்லி)

கீழா நெல்லி
- இது யூஃபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
- இது மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
- இது கல்லீரல் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
அலோவெரா (சோற்றுக் கற்றாழை)

சோற்றுக் கற்றாழை
- இந்த தாவரமானது லில்லியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
- இந்த தாவரத்தின் இலைகள் தீக்காயங்கள், ஒவ்வாமை எதிர்வினைகள்,மூலநோய், முடக்கு வாதம், வாத காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்படும் அழற்சி போன்ற பல்வேறு நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது.
- வயிற்றுப் புண்கள், நீரிழிவு நோய், மற்றும் செரிமான அழற்சி நிலைகளை குணப்படுத்தவும் இது பயன்படுகிறது.
Reference:
https://commons.wikimedia.org/wiki/File:Acalypha_indica(Kuppaimeni).JPG
https://commons.wikimedia.org/wiki/File:Bael03_FSPark_Asit.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Aloe_Vera_(%E0%A4%95%E0%A5%8B%E0%A4%B0%E0%A4%AB%E0%A4%A1).jpg
https://commons.wikimedia.org/wiki/File:Bael03_FSPark_Asit.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Aloe_Vera_(%E0%A4%95%E0%A5%8B%E0%A4%B0%E0%A4%AB%E0%A4%A1).jpg