PDF chapter test TRY NOW
4. நீர் சுழற்சி:
நீர் சுழற்சி சூரிய வெப்பத்தினால் நடைபெறுகிறது. அதாவது பெருங்கடல் மற்றும் கடல் போன்ற நீர்த்தேக்கங்களிலுள்ள நீர் சூடாகி நீராவியாக மாறி காற்றில் கலக்கிறது. மேலும் மரங்களும் நீரை வேரினால் உறிஞ்சி நீராவியாக்குதல் செயல்முறை மூலம் நீராவியை உருவாக்கி காற்றில் கலக்கச் செய்கின்றன. ஆனால் காடுகளில் மரங்கள் அழிக்கப்படுவதால் நீராவியின் அளவு குறைந்து நீர் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் விளைவாக மழைப்பொழிவின் அளவும் குறைகிறது.
நீர் சுழற்சி
5. வெள்ளம்:
மழைப்பொழிவின் போது மரங்கள் வேர்களின் மூலம் அதிகளவு நீரை உறிஞ்சி அதனை நீராவியாக மாற்றி காற்றில் கலக்க செய்கின்றது. ஆனால் மரங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக நீர் ஓட்டம் தடைபடுவதால் பல இடங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
வெள்ளம்
6. புவி வெப்பமயமாதல்:
பூமியில் வாழும் பெரும்பாலான உயிரினங்கள் வளிமண்டலத்தில் காற்றில் இருக்கும் ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக் கொண்டு கழிவுப் பொருளாக கார்பன் டை ஆக்சைடை வெளியே அனுப்புகின்றன. அதே நேரம், மரங்கள் கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு சூரிய ஒளியில் உதவியால் ஒளிச்சேர்க்கை நிகழ்வு நடைபெறும் போது தயாரிக்கப்படும் ஆக்சிஜன் வளிமண்டலத்தை சென்றடைகின்றன. காடுகளில் அதிகளவு மரங்களை அழிவதால், வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்து வருகிறது. பசுமை இல்ல வாயுக்களான நீராவி, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவை பூமியை வெப்பமாக்குகிறது.
புவி வெப்பமயமாதல்
பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஆற்றல் வளிமண்டலத்தில் பிரதிபலிக்கிறது. இந்த ஆற்றலின் ஒரு பகுதி பூமியை மீண்டும் சூடாக வைத்திருக்க பசுமை இல்ல வாயுக்களால் மீண்டும் வளிமண்டலத்தில் பிரதிபலிக்கும் அதன் இன்னொருப் பகுதி வளிமண்டலத்திற்கு விண்வெளிக்கு செல்கின்றன. ஆனால் வளிமண்டலத்தில் சேரும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெப்ப ஆற்றலைப் உட்கவர்கின்றன. இது வெப்பநிலை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது புவி வெப்பமயமாதல் என்று அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக துருவப்பகுதியில் காணப்படும் பனிமலைகள் உருகி அப்பகுதியில் வாழும் துருவக் கரடி போன்ற உயிரினங்கள் பாதிக்கப்படுகிறது.
7. வசிப்பிடங்கள் பாதிக்கப்படுதல்:
காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் தங்கள் தேவைகளுக்காக காடுகளையே சார்ந்துள்ளனர். அவர்கள் தங்களது உணவு மற்றும் பல்வேறு பொருள்களை காடுகளிலிருந்து பெறுகின்றனர். காடுகள் அழிக்கப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
பழங்குடி மக்கள்
Important!
அமேசான் காடு பற்றிய குறிப்பு:
பிரேசிலில் உலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசான் காடு உள்ளது. இதன் பரப்பளவு 60,00,000 சதுர கி.மீ. ஆகும். உலகிற்கு தேவையான 20% ஆக்சிஜன் இங்கிருந்துதான் கிடைக்கிறது. இவை கார்பன் டை ஆக்சைடு வாயுவை சமன் செய்வதன் மூலம் பூமியின் கால நிலையை மாற்றம் ஏற்படாமல் இருப்பதோடு புவி வெப்பமயமாதலைக் குறைக்கவும் உதவுகிறது, மேலும், இந்த காட்டில் சுமார் 390 பில்லியன் மரங்கள் உள்ளதாக கூறப்படுகின்றன. அமேசான் காடு பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது.
அமேசான் காடு