PDF chapter test TRY NOW
காடு அழிப்பு இரண்டு வகையில் நிகழ்கிறது. அதாவது, இயற்கையாக அல்லது மனிதச் செயல்கள் மூலமாக ஏற்படும்.
காடு அழிப்பு
1. இயற்கைக் காரணங்கள்:
- காட்டுத் தீ
- வெள்ளம் அல்லது புயல்கள்
2. மனிதச் செயல்பாடுகள் மூலம் ஏற்படும் காரணங்கள்:
- வேளாண்மை அதிகரிப்பு
- கால்நடை வளர்ப்பு
- சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல்
- சுரங்கப் பணி
- எண்ணெய் எடுத்தல்
- அணை கட்டுதல்
- கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்துதல்
இயற்கைக் காரணங்கள் பற்றிய விளக்கம்:
i. காட்டுத் தீ:
உலகமெங்குமுள்ள காடுகளில் மனித செயல்கள், விபத்துக்கள் அல்லது இயற்கை நிகழ்வுகள் மூலம் காட்டுத் தீ ஏற்படுவதன் விளைவாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கில் மரங்கள் அழிக்கப்படுகிறது. இவை உயிரினங்களின் பன்முகத்தன்மை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காட்டுத் தீ
ii. புயல்கள்:
இயற்கையின் சமச்சீரற்ற நிலை காரணமாக ஏற்படும் புயல், வெள்ளம் மற்றும் அதிக மழைப்பொழிவு போன்றவற்றினால் மரங்கள் அழிவதோடு மட்டுமல்லாமல் அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்களின் இருப்பிடம், உணவு மற்றும் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.
புயல், வெள்ளம்
Important!
மேலும் அறிந்து கொள்வோம்:
சூறாவளியின் பெயர் - மாநிலம் - ஆண்டு
பானி - ஒடிசா - 2019
கஜா - தமிழ்நாடு - 2018
ஒக்கி - தமிழ்நாடு - 2018
பேத்த - ஆந்திரா - 2017
வர்தா - தமிழ்நாடு - 2016