PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமனிதச் செயல்பாடுகள்
i. வேளாண்மை அதிகரிப்பு:
இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்றார் மகாத்மா காந்தி. மக்கள் தொகை அதிகரித்திருப்பதால் உணவும் அதிகளவு தேவைப் படுகின்றது. எனவே நிலப்பரப்பிற்காக அதிக எண்ணிக்கையில் மரங்கள் வெட்டப்பட்டு அதில் பயிர் உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. உலகில் விவசாயம் செய்வதற்காகவே \(40\) சதவீதத்திற்கும் அதிகமாகக் காடுகள் அழிக்கப்படுகிறது.
வேளாண்மை
ii. நகரமயமாதல்:
ஒரு நாட்டின் வளர்ச்சி அங்குக் கட்டப்பட்ட கட்டமைப்பைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. இதனால் நகரங்களை விரிவுபடுத்தல், வீட்டுவசதி மற்றும் குடியேற்றங்களை அமைத்தல் போன்றவற்றிற்கு நிலப்பரப்பின் தேவை அதிகம் உள்ளது. இதன் காரணமாகவும் காடுகள் அழிக்கப்படுகிறது.
Example:
சாலைகள் அமைத்தல், சாலைகளை விரிவுபடுத்தல், வீடு கட்டுதல், கனிமங்களைத் தோண்டியெடுத்தல் மற்றும் தொழிற்சாலைகளை விரிவுபடுத்தல்.
காடு அழிப்பு
iii. சுரங்கப் பணி:
சுரங்கத்திலிருந்து கனிமங்களான நிலக்கரி, வைரம் மற்றும் தங்கம் தோண்டி எடுக்க அதிகளவு நிலப்பரப்பு தேவைப்படுவதால் மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படுகிறது. மேலும் சுரங்கப் பணி நடைபெறும் போது வெளியேறும் மாசுக்கள் சுற்றுச்சூழல் மற்றும் அவ்விடத்தில் வாழும் மக்களுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.
iv. அணைகள் கட்டுதல்:
அணை என்பது ஆறுகளின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். மக்கள் தொகை அதிகரிப்பதால் பல நாடுகளில் அணைகள் அமைக்கப்பட்டு நீர் சேமிக்கப்படுகிறது. இந்த நீர் பெரும்பாலும் விவசாய பாசனத்திற்கும், நகரங்கள், மற்றும் கிராமங்களின் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது. மேலும், பருவ காலங்களில் பொழியும் அதிக மழை நீரைச் சேமிக்கவும், வெள்ள அபாயத்திலிருந்து நகரங்களையும், கிராமங்களையும் காக்கவும் அணைகள் உதவுகின்றன. எனவே அணைகள் கட்டப்படும் போது காடுகள் அழிக்கப்படுகிறது.
அணை
v. மரக்கட்டை உற்பத்தி
மனிதனின் அடிப்படைத் தேவைக்கு மரம் முக்கியமாகப் பயன்படுகிறது. மரத்தை அடிப்படையாகக் கொண்டு காகிதம், தீக்குச்சி மற்றும் மரத்தாலான பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலும் எரிபொருளாகவும் மரக்கட்டைகள் பயன்படுகிறது. எனவே, இதன் விளைவாக மரங்கள் அழிக்கப்படுகிறது. சட்டவிரோதமாகவும் சில மனிதர்கள் அதிக எண்ணிக்கையில் மரங்களை வெட்டி காடுகளை அழித்து வருகின்றனர். இவை அரிய வகை மற்றும் விலை மதிப்பு உயர்ந்த தாவரங்களின் மறைவிற்கு மூல காரணமாக உள்ளது.
மரங்களை அழித்தல்
இந்தியாவில் \(1970\) ஆம் ஆண்டு சிப்கோ இயக்கம் நிறுவப்பட்டது. இது ஒரு வனப் பாதுகாப்பு இயக்கம், இதனை சுந்தர்லால் பகுகுனா என்பவர் தொடங்கினார். ‘சிப்கோ’ என்பது ‘ஒட்டிக் கொள்வது’ அல்லது ‘கட்டிப் பிடிப்பது’ என்று பொருள்படும். இந்த அமைப்பின் நோக்கம் மரங்களைப் பாதுகாப்பது மற்றும் காடுகள் அழியாமல் அவற்றைப் பராமரித்தலாகும்.