PDF chapter test TRY NOW

காடு மீள்வளர்ப்பு என்பது இயற்கை நிகழ்வுகளால் அல்லது மனிதர்கள் மூலம் அழிந்து போன காடுகளில் மரங்கள் இயற்கையாக வளர்வது அல்லது மரங்களைத்  தேவைக்கேற்ப நடுவது ஆகும்.
காடு மீள்வளர்ப்பு, காடு வளர்ப்பு இரண்டும் ஒன்றாக இருந்தாலும், அவை இரண்டும் ஒன்றல்ல.
 
காடு மீள்வளர்ப்பு என்பது காடு அழிப்பினால் காடுகளை இழந்த நிலப்பரப்பில் மீண்டும் மரங்களை நடுவது ஆகும். ஆனால், காடு வளர்ப்பு என்பது தரிசு நிலங்கள் அல்லது மரங்கள் இல்லாத இடங்களில் புதிய காடுகளை உருவாக்குவதாகும்.
 
புவி வெப்பமாதலைத் தடுப்பதற்கு மரங்கள் வளர்ப்பது ஒரு சிறந்த தீர்வாகும். காலநிலை மாற்றத்தைப் பராமரிப்பது மட்டுமல்லாமல், சில அரிய வகை விலங்கு சிற்றினங்களைப் பாதுகாக்கவும் காடு மீள்வளர்ப்பு பயன்படுகிறது.
 
சிற்றினங்களின் உயிருக்குப் பாதிப்பு ஏற்படுதல், அவை பயப்படுவதற்குக் காரணமான இருப்பிடங்களின் இழப்பு மற்றும் சீரழிவைத் தடுப்பதற்கும் காடு மீள்வளர்ப்பு மிகவும் அவசியமானதொன்றாகக் கருதப்படுகின்றது.
 
ReforestationPraslin2 (1).jpg
காடு மீள்வளர்ப்பு
  
காடு மீள்வளர்ப்பின் முக்கியத்துவம்:
காடுகளை அழிவிலிருந்து பாதுகாக்கக் காடு வளர்ப்பு மற்றும் காடு மீள்வளர்ப்பு ஆகிய இரண்டும் ஒரு சிறந்த தீர்வாகும். சிற்றினங்களின் இருப்பிடத்தைப் பாதுகாத்தல், காடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்களின் உற்பத்தி அதிகரித்தல், மற்றும் பருவநிலை மாற்றங்களுக்குத் தீர்வு காண்பதற்கும் இவை  உதவுகின்றன.
 
 காடு மீள்வளர்ப்பின் பயன்கள்:
 
• காடுகளை மீட்டெடுத்தல் மூலம்  கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை வளிமண்டலத்தில் கட்டுப்படுத்தி நாம் உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனின் தரத்தை உயர்த்தலாம்.
• காடு அழிப்பின் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்யவும் மற்றும் புவிவெப்பமயமாதலைத் தடுக்கவும் காடு மீள்வளர்ப்பு பெரிதும் உதவுகிறது.
• காடு மீள்வளர்ப்பின் மூலம் அழிந்துபோன மற்றும் சிதைந்த சிற்றினங்களின் இருப்பிடங்களைப் மீண்டும் உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், சிற்றினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் சரி செய்ய இயலும்.
• காடு மீள்வளர்ப்பு மூலம் மண் அரிப்பினால் ஏற்பட்ட அழிவைச் சரி செய்ய முடிவதோடு சுற்றுச்சூழல் நலத்தில் பங்கு கொள்ளும் முக்கியமான நீர்நிலைகளையும் மீட்டெடுக்க முடியும்.
• காடு மீள்வளர்ப்பு மூலம் மரங்களின் பகுதிகளான இலை மற்றும் வேர் வழியாக நீரை அல்லது ஈரப்பத்தை இழுத்துக் கொள்வதன் காரணமாக நீர் சுழற்சியைப் பராமரிக்க முடியும்.
• காடு மீள்வளர்ப்பு மூலம் மரங்களின் நீராவிப்போக்கு சீராக மாறி காற்றில் ஈரப்பதம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி இவ்விடங்களில் காணப்படும் வெப்பநிலையைச் சீராக்குகின்றது.