PDF chapter test TRY NOW
அணுவின் உள்ளே ஏற்படும் அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு அணுக்கடிகாரங்கள் செயல்படுகின்றன. இவற்றின் துல்லியம் 10^13 வினாடிக்கு ஒரு வினாடி என்ற அளவில் இருக்கும்.
பயன்கள்:
அணுக்கடிகாரங்கள், பூமியில் இருப்பிடத்தைக் காட்டும் அமைப்பு (Global Positioning System - GPS), பூமியில் வழிகாட்டும் செயற்கைக் கோள் அமைப்பு (Global Navigation Satellite System - GLONASS) மற்றும் பன்னாட்டு நேரப்பங்கீட்டு அமைப்பு (Time Distribution Services) ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
உங்களுக்கு தெரியுமா?
National Institute of Standards and Technology (U.S.A) உலகின் மிகத் துல்லியமான கடிகாரத்தை உருவாக்கியுள்ளது, இது 20 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வினாடியை இழக்கிறது அல்லது பெறுகிறது.
கிரீன்விச் சராசரி நேரம் (GMT):
இது இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகருக்கு அருகில், கிரீன்விச் என்னுமிடத்தில் உள்ள இராயல் வானியல் ஆய்வுமையத்தின் (Royal Astronomical Observatory) நேரமாகும். இது \(0°\) தீர்க்கக் கோட்டில் கணக்கிடப்படுகிறது.
உங்களுக்கு தெரியுமா?
\(15°\) இடைவெளியில் அமைந்த தீர்க்கக் கோடுகளின் அடிப்டையில் \(24\) மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை நேரமண்டலங்கள் (Time Zones) என்று அழைக்கப்படுகின்றன. \(1 \)மணி நேர கால இடைவெளியில் அடுத்தடுத்த இரண்டு நேர மண்டலங்கள் அமைந்திருக்கும்.
இந்திய திட்ட நேரம் (IST):
இந்திய திட்ட நேரம், இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்சாபூர் (Mirzapur) எனும் இடத்தின் வழியாகச் செல்லும் தீர்க்கக் கோட்டை ஆதாரமாகக் கொண்டு கணக்கிடப் படுகிறது. இது \(82.5°\) (கிழக்கு) தீர்க்கக் கோட்டில் அமைந்துள்ளது.
உங்களுக்கு தெரியுமா?
கிரீன்விச் சராசரி நேரத்திற்கும் இந்திய திட்ட நேரத்திற்கும் உள்ள தொடர்பு பின்வருமாறு, \(IST =\) கிரீன்விச் சராசரி நேரம் \(+ 5.30\) மணி
செயல்பாடு:
ஒரு சூரியகடிகாரத்தை உருவாக்கி, ஒரு நாளின் நேரத்தைக் குறித்துவைக்கவும். இந்த மதிப்புகளை நவீன கடிகாரங்களின் மதிப்புகளுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கவும்.