PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பண்டைய காலங்களில் மக்கள், சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு  போன்ற சில இயற்கை நிகழ்வுகள், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு வழக்கமாக நிகழ்வதை கவனித்தனர்.
 
night6522311280w1280.jpg
  
மேலும், மக்கள் நிழல்களின் உதவியுடன் ஒரு நாளின் நேரத்தைக் கணக்கிட்டனர். அவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு வடிவமைப்புகளுடன் வெவ்வேறு நேரத்தை அளவிடும் சாதனங்களையும் பயன்படுத்தினர்.
 
shutterstock1282507951.jpgindoor52359531280.jpg
 
சூரிய கடிகாரம், மணல் கடிகாரம் மற்றும் நீர் கடிகாரம் ஆகியவை பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நேரத்தை அளவிடும் சாதனங்களாகும்.  இந்த சாதனங்கள் கடிகாரங்கள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டன.
கடிகாரங்கள்
ஒரு நாளின் நேர இடைவெளியை அளவிட கடிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத்திலிருந்தே பல வகையான கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அறிவியல் அறிஞர்கள்  ஒவ்வொரு முறையும் துல்லியத்தை அதிகரிக்க கடிகாரத்தின் செயல்பாடு முறையை மேம்படுத்தியுள்ளனர்.
 
pendulumclockoldpendulumclockface.jpg
கடிக்காரத்தின் வகைகள்
காட்சியின் அடிப்படையில் இருவகைக்கடிகாரங்கள் உள்ளன. அவை:
 
1. ஒப்புமை வகைக் கடிகாரங்கள்
 
2. எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள்
 
1. ஒப்புமை வகைக் (Analog)
 
கடிகாரங்கள் இவை பாரம்பரியமான கடிகாரங்களை ஒத்திருக்கின்றன. இவை மூன்று குறிமுள்கள்மூலம் நேரத்தைக் காட்டுகின்றன.
 
மணி முள்
  • இது குட்டையாகவும், தடிமனாகவும் அமைந்திருக்கும். இந்த முள் கடிகாரத்தில் மணியைக் (Hour) காட்டுகிறது.
நிமிட முள்
  • நிமிடத்தைக் காட்டும் இந்த முள் நீளமாகவும், மெல்லியதாகவும் இருக்கும்.
வினாடி முள்
  • இது நீளமாகவும், மிகவும் மெல்லியதாகவும் இருக்கும். இது வினாடியைக் குறிக்கிறது. இது ஒரு நிமிடத்திற்கு ஒரு முறையும், ஒரு மணிக்கு \(60\) முறையும் கடிகாரத்தைச் சுற்றி வருகிறது.
  • ஒப்புமை வகைக் கடிகாரங்கள் எந்திரவியல் தொழில் நுட்பம் அல்லது மின்னியல் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் வகையில் உருவாக்கப்படுகின்றன.
clock650753960720.jpg
செயல்பாடு:
 
ஒரு அட்டையைப் பயன்படுத்தி ஒப்புமை வகைக் கடிகாரத்தின் மாதிரியை உருவாக்கவும்.
 
shutterstock_1918228265.jpg
2. எண்ணிலக்க வகைக் (Digital)
 
கடிகாரங்கள் எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள் நேரத்தை எண்களாகவோ அல்லது குறியீடுகளாகவோ நேரடியாகக் காட்டுகின்றன.
 
இவை \(12\) மணி நேரம் மற்றும் \(24\) மணி நேரம் முதலிய இரண்டு நேர வகைகளை காட்டும் விதத்தில் வடிவமைக்கப்படுகின்றன. தற்காலத்தில் கடிகாரங்கள் நாள், கிழமை, மாதம், ஆண்டு, வெப்பநிலை போன்றவற்றைக் காட்டும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
 
எண்ணிலக்க வகைக் கடிகாரங்கள், பொதுவாக மின்னியல்கடிகாரங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், உணவகங்கள், வங்கிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
செயல்பாடு:
 
ஒரு அட்டையின் மேல் தீக்குச்சிகளை வைத்து நாள் மற்றும் நேரத்தைக் காட்டும் எண்ணிலக்க வகைக் கடிகாரத்தை உருவாக்கவும்.
 
shutterstock_1056693632.jpg