PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo

அலகுகளின் அமைப்பு:
 

இயற்பியல் என்பது அறிவியலின் ஒரு கிளை ஆகும். நம்மை சுற்றி நிகழ்கின்ற இயற்கை நிகழ்வுகளை அறிய அது பயன்படுகிறது. அறிவியலின் அனைத்து கிளைகளும் இயற்பியலின் ஆராய்ச்சி முடிவுகளை அடித்தளமாக கொண்டு நிறுவப்படுகிறது எனலாம். இயற்பியல் தத்துவங்களும் பரிசோதனை முடிவுகளும் இயற்கையை பற்றிய தெளிவை கொடுக்கின்றன.


1be2c6675db20f9206c8b2f68ba25fb6a154a09f.jpg
 

மேலும் பரிசோதனை மற்றும் ஆராய்ச்சிகளின் முடிவுகள் அறிவியல் தத்துவங்களை உறுதிப்படுத்துகின்றன. அவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளில் இயற்பியல் அளவுகள் அதிகம் இடம்பெறும். அளவீடுகள் அவற்றின் அத்தியாவசிய தேவையாகும். அன்றாட வாழ்விலும் அளவீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

அளவீடுகள்

அளவீடு என்பது அறியப்படாத அளவை அறியப்பட்ட அளவோடு ஒப்பிடுவதன் மூலம் தீர்மானிக்கும் முறையாகும். எண்மதிப்புகளும் அலகுகளும் அளவீட்டின் இரு முக்கிய பாகங்களாகும்.

madetomeasurevscustomsuit.jpg

ஆடைகளை அளவிடுதல்


இயற்பியல் அளவு என்பது ஒரு பொருள் அல்லது பொருட்களின் பண்புகளை அளவிடுவதாகும். அவற்றில் சில அளவுகள் நீளம், நிறை, வெப்பநிலை மற்றும் கன அளவு முதலியவை ஆகும்.

 

சரியான அளவீட்டிற்கான மூன்று விடயங்கள் தேவை. அவை:  

 

1. கருவி

2. நிலையான அளவு

3. அலகு

செயல்பாடு \(1\):

 

அளவுகோலைக் கொண்டு உங்களது மேஜையின் நீளம் மற்றும் அகலம் முதலியவற்றை அளக்கவும். நீங்கள் அளவிட்ட மதிப்புகளையும் உங்களின் நண்பர்களின் அளவீட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்கவும்.

129711b912d310647ce5056d95917a510a0f4ef8w817.jpg
மேசை

 

மேலே குறிப்பிட்ட செயல்பாட்டில் மேஜையின் நீளத்தை \(25\)செ.மீ. என்று எடுத்துக்கொள்வோம். இவற்றில்:

 

நீளம்இயற்பியல் அளவு
அளவுகோல்அளவிடும் கருவி
செ.மீ.அலகு

 

ஒரு மேஜையின் நீளம் \(25\)செ.மீ. இடைவெளி என்றால், அதில் \(25\) என்பது எண்மதிப்பை குறிக்கும், சென்டிமீட்டர் (செ.மீ.) என்பது அலகை குறிக்கும். இவ்வாறு இயற்பியல் அளவுகளில் அளவிடும் கருவி, மதிப்பீட்டு எண், அலகு முதலையவை முக்கிய அம்சங்களாகும். மேஜையின் அளவை கணக்கிட்ட செயல்பாட்டில் ஒரே மாதிரியான மதிப்புகள் கிடைத்திருக்காதது குறிப்பிடதக்கது. 

  

அலகு அமைப்புகள்

 

அளவீடுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களால் பல்வேறு அலகு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அலகுகளின் பொதுவான அமைப்புகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

அலகு அமைப்பு
நீளம்
நிறை
நேரம்
CGS
சென்டிமீட்டர்
கிராம்
வினாடி
MKS
மீட்டர்
கிலோகிராம்
வினாடி
FPS
அடி
பவுண்ட்
வினாடி