PDF chapter test TRY NOW
நிலையான அலகின் தேவை
மேஜையின் நீளத்தை அளக்கும் செயல்பாட்டில் நீங்களும் உங்கள் நண்பர் ஒருவரும் இரு வகையான அளவுகோல்களை பயன்படுத்தினீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
நபர் -\(1\) சென்டிமீட்டர் அளவுகோலையும் நபர் -\(2\) அங்குல அளவுகோலையும் கொண்டு அளவிடப்பட்ட மதிப்புகள் \(25\) மற்றும் \(9.8\) என்று எடுத்துக்கொள்வோம். இவை இரண்டையும் ஒப்பிட முடியுமா? எந்த நபரின் அளவீடை சரி என எடுத்துக்கொள்வது?
எண்களுக்கு இடையே பெரிய வித்தியாசம் இருந்தாலும் இரண்டுமே சரியான மதிப்புகள்தான்! காரணம் இரண்டு அளவீடுகளின் அலகுகளும் வெவ்வேறானதாகும். எனில் இரண்டையும் ஒப்பிட உங்கள் ஆசிரியர் ஒரு நிலையான அலகை கொடுக்க வேண்டும். ஒரே அலகில் உள்ள மதிப்புகளை எளிதில் ஒப்பீடு செய்ய முடியும்.
இதே போல பண்டைய காலங்களில், அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சிகளை நடத்தி தங்கள் கண்டுபிடிப்புகளை தங்கள் சொந்த அலகு அமைப்புகளில் பதிவு செய்தனர். ஆனால், இவை மற்ற அறிவியல் அறிஞர்களிடமிருந்து வேறுபடுவதால் சீரற்றதாகவும் சீரான தன்மை இல்லாததாகவும் இருந்தது.
மேலும், பண்டைய காலத்தில் தகவல் தொடர்பு பெரும்பான்மையாக இல்லாததால் மற்றவர்களின் ஆராய்ச்சிகளின் முடிவுகளை அவர்களால் ஒழுங்கமைக்க முடியவில்லை. எனவே, அவர்கள் அனைவருக்கும் சீரான அளவீடுகளை பதிவு செய்ய ஒரு அமைப்பை உருவாக்கினர்.
அலகுகளின் அமைப்பு \(1960\) ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸில் நடைபெற்ற General Conference on Weights and Measures குறித்த \(11\)வது பொது மாநாட்டில், இயற்பியல் அளவுகளுக்கான நிலையான அலகுகளின் முக்கியத்துவத்தை அறிவியல் அறிஞர்கள் அங்கீகரித்துள்ளனர்.
இதன் விளைவாக, மெட்ரிக் அமைப்பு என்ற தொகுப்பை சீரான அளவீடுகளுக்காக உருவாக்கினர். அளவீடுகளை, உலகில் அனைத்து பகுதிகளிலும், சீராக குறிக்க International System of Units அல்லது SI அலகுகள் அல்லது பன்னாட்டு அலகுகள் பயன்படுத்தபடுகிறது.
'SI' என்ற சொல் 'Systeme International' என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து சுருக்கப்பட்டது.
உங்களுக்கு தெரியுமா?
அலகுகளின் அமைப்பில், CGS, MKS மற்றும் SI அலகுகள் அலகுகளின் மெட்ரிக் அமைப்புகளாகும். FPS அமைப்பு என்பது பிரிட்டிஷ் அலகுகளின் அமைப்பு.
அலகுகளின் அமைப்பில், CGS, MKS மற்றும் SI அலகுகள் அலகுகளின் மெட்ரிக் அமைப்புகளாகும். FPS அமைப்பு என்பது பிரிட்டிஷ் அலகுகளின் அமைப்பு.
அடிப்படை அளவுகள் மற்றும் அலகுகள்: ''அடிப்படை அளவுகள்" என அறியப்படும் ஏழு இயற்பியல் அளவுகள் உள்ளன, அவற்றை அளவிட நிலையான அலகுகள் உருவாக்கப்பட்டன. அந்த நிலையான அலகுகள் 'அடிப்படை அலகுகள்' என அழைக்கப்பட்டன, அவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அளவு | அலகு |
நீளம் | மீட்டர் (m) |
நிறை | கிலோகிராம் (kg) |
காலம் | வினாடி (s) |
வெப்பநிலை | கெல்வின் (K) |
மின்னோட்டம் | அம்பியர் (A) |
பொருளின் அளவு | மோல் (mol) |
ஒளிச்செறிவு | கேண்டிலா (cd) |
Important!
உங்களுக்கு தெரியுமா?
அறிக்கையின்படி, கலிபோர்னியாவில் உள்ள பணி வழிநடத்தும் குழுவிற்கும் கொலராடோவில் உள்ள விண்கலக் குழுவிற்கும் இடையே தகவல் பரிமாற்றத்தின் பிழை இருந்தது தெரிய வந்தது. இதன் காரணமாகவே சுற்றுப்பாதை கணக்கீடுகள் துல்லியம் இல்லை. ஒரு குழு கணக்கீடுகளுக்கு \(MKS\) அமைப்பைப் பயன்படுத்தியது, மற்ற குழு ஆங்கில \(FPS\) முறையைப் பயன்படுத்தியது. இந்த தவறான புரிதலால் சுமார் \(125\) மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது.