PDF chapter test TRY NOW
SI அலகுகள் மற்றும் அவற்றின் சின்னங்களை எழுதுவதற்கான விதிகள் மற்றும் மரபுகள் பின்வருமாறு:
1. அறிஞர்களின் பெயரிடப்பட்ட அலகுகளின் சின்னங்கள் பெரிய எழுத்தால் எழுதப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டு: நியூட்டனுக்கு \(N\), ஹென்ரிக்கு \(H\), ஆம்பியருக்கு \(A\) மற்றும் வாட்டிற்கு \(W\).
2. பெயர்ச்சொல்லில் இருந்து பெறப்படாத அலகுகளுக்கான சின்னங்களாக சிறிய எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: மீட்டருக்கு மீ \((m)\), கிலோகிராமுக்கு கி.கி.\((kg)\)
3. சின்னங்களுக்குள் அல்லது சின்னங்களுக்கு முடிவில் நிறுத்தற்குறிகளை பயன்படுத்தப்படக்கூடாது.
எடுத்துக்காட்டு: \(5\) மீ என்று எழுதலாம், \(5\)மீ. மற்றும் \(5\).மீ இவ்வாறு எழுதக்கூடாது.
4. அலகுகளின் குறியீடுகளை பன்மை வடிவத்தில் எழுதக்கூடாது.
எடுத்துக்காட்டு: \(100\) கிலோ என்று எழுதலாம், \(100\) கிலோகள் இல்லை.
5. வெப்பநிலை கெல்வினில் வெளிப்படுத்தப்படும் போது, டிகிரி அடையாளம் தவிர்க்கப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டு: \(383 K\) என்று எழுதலாம், \(383° K\) என எழுதக்கூடாது (செல்சியஸ் அளவில் வெளிப்படுத்தப்பட்டால், டிகிரி குறி சேர்க்கப்பட வேண்டும்,
எடுத்துக்காட்டு: \(100 °C\) என்று எழுதலாம், \(100 C\) என எழுதக்கூடாது மற்றும் \(108 °F\) என்று எழுதலாம், \(108 F\) என எழுதக்கூடாது).
6. ஒரு அலகு சின்னத்தை மற்றொரு அலகு சின்னத்தால் வகுப்பதைக் குறிப்பிடுவதற்கு வகுத்தல் குறியீடு (/) பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வகுத்தல் குறியீடு பயன்படுத்தப்பட கூடாது.
எடுத்துக்காட்டு: \(ms^{−1}\) என்று எழுதலாம் அல்லது \(m/s\). ஆனால், \(J/K/mol\) என்பது \(JK^{−1}mol^{−1}\) ஆக இருக்க வேண்டும்.
7. எண் மற்றும் அலகுகள் இடைவெளியால் பிரிக்கப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டு: \(15\) \(kgms^{−1}\) என்று எழுத வேண்டும், \(15kgms^{−1}\) என்று எழுதிய கூடாது.
8. அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சின்னங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு: ஆம்பியர் என்பதை ஆம்ப் என்றும், வினாடியை வினா என்றும் எழுதக்கூடாது.
9. இயற்பியல் அளவுகளின் எண் மதிப்புகள் அறிவியல் வடிவத்தில் எழுதப்பட வேண்டும். எடுத்துக்காட்டு: பாதரசத்தின் அடர்த்தி \(1.36×10^4\) \(kgm^{−3}\) என எழுதப்பட வேண்டும், \(13600\) \(kgm^{−3}\) என எழுதுவதை தவிர்க்க வேண்டும்.