PDF chapter test TRY NOW
அலகு
தெரியாத அளவு ஒன்றுடன் ஒப்பிடக்கூடிய படித்தரமான அளவே அலகு எனப்படும். அலகு என்பது விதி அல்லது மரபின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட எண்மதிப்பை உடைய இயற்பியல் அளவு என்று வரையறுக்கப்படுகிறது.
உதாரணம் - \(1\): கடை ஒன்றில் \(4\) கிலோகிராம் காய்கறிகள் வாங்குவதாக வைத்துக் கொள்வோம். இதில், \(4\) என்பது எண்மதிப்பு, கிலோகிராம் என்பது அலகு ஆகும்.
உதாரணம் - \(2\): அடி என்பது நீளத்தை அளவிடக்கூடிய அலகு ஆகும். எனில், \(10\) அடிகள் என்பது '\(1\) அடி' என்ற வரையறுக்கப்பட்ட நீளத்தைப் போன்று \(10\) மடங்கு என்பதைக் குறிக்கிறது.
- இயற்பியல் அளவை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் நிலையான சொல் அலகு எனப்படும்.
- இது விதி அல்லது மரபின்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட எண்மதிப்பை உடைய இயற்பியல் அளவாகும்.
உதாரணமாக:
ஒரு சென்டிமீட்டர் என்பது நீளத்தை அளவிடுவதற்கான ஒரு அலகு. ஒருவரின் உயரம், சட்டையின் நீளம் போன்றவற்றை அளவிட இந்த அலகைப் பயன்படுத்துகிறோம்.
பண்டைய காலங்களில், அறிவியல் அறிஞர்கள் அராய்ச்சிகளை நடத்தி தங்கள் கண்டுபிடிப்புகளை தங்கள் சொந்த அலகு அமைப்புகளில் பதிவு செய்தனர். ஆனால், இவை மற்ற அறிவியல் அறிஞர்களிடமிருந்து வேறுபடுவதால் சீரற்றதாகவும் சீரான தன்மை இல்லாததாகவும் இருந்தது.
மேலும், பண்டைய காலத்தில் தகவல் தொடர்பு பெரும்பான்மையாக இல்லாததால் மற்றவர்களின் ஆராய்ச்சிகளின் முடிவுகளை அவர்களால் ஒழுங்கமைக்க முடியவில்லை. எனவே, அவர்கள் அனைவருக்கும் சீரான அளவீடுகளை பதிவு செய்ய ஒரு அமைப்பை உருவாக்கினர். அடிப்படையில், இயற்பியல் அளவுகளை அளவிடுவதற்கு அலகுகளின் நிலையான அமைப்பு முன்மொழியப்பட்டது.
அலகு அமைப்புகள்:
அளவீடுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களால் பல்வேறு அலகு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அலகுகளின் அமைப்பு என்பது அனைத்து வகையான இயற்பியல் அளவுகளுக்கும் அடிப்படை மற்றும் வழி அலகுகளின் முழுமையான தொகுப்பாகும். அலகுகளின் பொதுவான அமைப்புகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அலகு அமைப்பு | நீளம் | நிறை | நேரம் |
CGS | சென்டிமீட்டர் | கிராம் | வினாடி |
MKS | மீட்டர் | கிலோகிராம் | வினாடி |
FPS | அடி | பவுண்ட் | வினாடி |